ஐபிஎல் ஆரம்பிக்கப் போகுது…குறைந்த செலவில் ஜியோ ஹாட்ஸ்டார் வேணுமா? இதோ உங்களுக்காக!

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், ஐபிஎல் 2025-ஐப் பார்க்கத் தேவையான, ஜியோஹாட்ஸ்டார் குறைவாக சந்தா கட்டி பார்க்கும் திட்டத்தை கொண்டு வந்திருக்கிறது.

jio hotstar ipl 2025

டெல்லி : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றாலே கிரிக்கெட் ரசிகர்களை கையில் பிடிக்க முடியாது என்று சொல்லலாம். ஏனென்றால், அந்த அளவுக்கு ஐபிஎல் முடியும் வரை தொடர்ச்சியாகவே ஐபிஎல் போட்டிகளை பார்த்து கண்டுகளித்து வருவார்கள். ஆனால், கடந்த சில ஆண்டுகளாகவே பலரும் ஜியோ ஜினிமாவில் இலவசமாக ஐபிஎல் போட்டிகளை பார்த்துக்கொண்டிருந்த நிலையில், இப்போது அந்த வசதி இல்லை என்பது தான் பெரிய சோகமான விஷயமாக இருந்து வருகிறது.

ஏனென்றால் ஜியோ சினிமாவும், ஹாட்ஸ்டாரும் இணைந்திருக்கும் காரணத்தால் இப்போது கிரிக்கெட் போட்டிகளை பார்க்கவேண்டும் என்றால் அதற்காக மாதம் சந்தா கட்டவேண்டும் என்கிற அம்சம் கொண்டு வரப்பட்டுள்ளது. எனவே, பலரும் இதற்கும் தனியாக சந்தாக்கட்டி போட்டிகளை பார்க்கவேண்டுமா? என யோசனையில் இருக்கிறார்கள். அவர்களுக்காகவே இப்போது ஜியோ நிறுவனமானது மலிவான விலையில் ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தை பயன்படுத்திக்கொள்ளும் அம்சத்தை கொண்டு வந்திருக்கிறது.

அது என்ன திட்டம் என்றால் ரூ.100 ப்ரீபெய்ட் திட்டம் தான். இந்த திட்டத்தை நீங்கள் சாதாரணமாக உங்களுடைய நம்பருக்கு ரீஜார்ஜ் செய்யும் மை ஜியோ செயலிகுள் சென்று செய்துகொள்ளலாம். ரூ.100 ப்ரீபெய்ட் திட்டம் மிகவும் மலிவு விலையில் கிடைக்கும் ஒரு திட்டம் என்பதால் குறைவாக பட்ஜெட் வைத்திருப்பவர்கள் இந்த திட்டத்தை வாங்கிக்கொள்ளலாம். இந்த திட்டத்தில் ரீஜார்ஜ் செய்தால் 90 நாட்கள் ஒரு போனில் ஐபிஎல் போட்டிகளை ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் பார்த்துக்கொள்ளலாம். 90 நாட்கள் வேலிடிட்டி மற்றும் 5 ஜிபி மொத்த டேட்டாவும் இந்த திட்டத்தில் கிடைக்கும்.

அதைப்போல, ரூ.195 ஜியோ கிரிக்கெட் டேட்டா பேக்க்கும் ஜியோ நிறுவனம் கொண்டு வந்துள்ளது. இந்த திட்டத்தில் 15 ஜிபி மொபைல் டேட்டா மற்றும் 90 நாட்களுக்கு இலவச ஜியோஹாட்ஸ்டார் வசதி வருகிறது. ஏற்கனவே நீங்கள் உங்களையுடைய நம்பருக்கு ரீஜார்ச் செய்து வைத்திருப்பீர்கள் எனவே தனியாக ஜியோ ஹாட்ஸ்டார் வசதி வேண்டும் என்றால் மாதம் 149 ரூபாய் சந்தா கட்ட வேண்டும். அதுவும் ஒரு மாதம் தான் வரும். ஆனால், நீங்கள் இந்த ரூ.100 திட்டத்தில் ரீஜார்ச் செய்தீர்கள் என்றால் உங்களுக்கு மொத்தமாக 90 நாட்கள் பயன்படுத்தி கொள்ளும் வசதி வருகிறது. எனவே, குறைவான பட்ஜெட்டுடன் ஜியோ ஹாட்ஸ்டார்  வசதி தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு இந்த திட்டங்கள் பயனுள்ளதாக இருக்கும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்