LIVE : கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம் முதல்… இன்று தொடங்கும் ஐபிஎல் திருவிழா வரை.!

தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம் முதல் 18வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டித் திருவிழா உட்பட பல்வேறு உள்ளூர், சர்வதேச நிகழ்வுகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம்.

tamil live news

சென்னை : தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் கூட்டு நடவடிக்கைக் குழு தொடர்பான முதற்கட்ட ஆலோசனைக் கூட்டம் சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடை பெறுகிறது. கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, ஒடிசா மேற்குவங்கம் மற்றும் பஞ்சாப் ஆகிய 7 மாநிலங்களை சேர்ந்த முதலமைச்சர்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

மேலும், 10 அணிகள் பங்கேற்கும் 18வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டித் திருவிழா இன்று கோலாகலமாக தொடங்குகிறது. 13 இடங்களில் நடைபெற உள்ள துவக்க துவக்க விழாவில் பாலிவுட் பிரபலங்கள் பங்கேற்கும் கலைநிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்றிரவு 7.30 மணிக்கு கொல்கத்தா – பெங்களூரு அணிகள் மோதுகின்றன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்