அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் பணியிடம் அறிவிப்பு.! நாளை முதல் விண்ணப்பிக்கலாம்..

தமிழ்நாட்டில் உள்ள 8 போக்குவரத்துக் கழகங்களில் காலியாக உள்ள 3,274 ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களுக்கு நாளை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

TN Driver Conductor

சென்னை : தமிழ்நாடு போக்குவரத்துத்துறையில் காலியாக உள்ள 3,274 ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. நாளை (மார்ச் 21) முதல் ஏப்.21 ஆம் தேதி வரை www.arasubus.tn.gov.in இணையதளம் விண்ணப்பிக்கலாம்.

MTC, SETC, TNSTC உள்ளிட்ட அனைத்து போக்குவரத்து கழகங்களிலும் காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னை உள்ளிட்ட 8 மண்டலங்களுக்கு உட்பட்ட 25 பகுதிகளில் பணியிடங்களை நிரப்பபடவுள்து.

அதன்படி, கோவை – 344, மதுரை – 322, கும்பகோணம் 756, சேலம் 486, சென்னை 364, நெல்லையில் 362 பணியிடங்கள் காலியாக உள்ளன.

தகுதி: பொதுவாக, ஓட்டுநர் பதவிகளுக்கு ஓட்டுநர் உரிமம் (Driving License) மற்றும் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி தேவைப்படலாம். நடத்துநர் பதவிகளுக்கு குறைந்தபட்ச கல்வித்தகுதி (பொதுவாக 10-ஆம் வகுப்பு) மட்டும் போதுமானது.

மேலும் தகவலுக்கு, அதிகாரப்பூர்வ அறிவிப்பு அல்லது TNSTC இணையதளத்தை பார்வையிடவும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்