மங்களகரமா பாட்டுல ஆரம்பிக்கிறோம்! வாடிவாசல் படத்தின் தரமான அப்டேட்!

வாடிவாசல் படத்தின் படப்பிடிப்புக்கு மதுரையில் இடம் பார்த்து வருவதாக தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தெரிவித்துள்ளார்.

vaadivaasal

சென்னை : சூர்யா ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் தனியாக ஒரு படத்தில் நடிக்க எந்த அளவுக்கு எதிர்பார்ப்பு இருக்கிறதோ அதே அளவுக்கு அவர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்கவுள்ள வாடிவாசல் படத்தின் மீதும் இருக்கிறது. இன்னும் இருவரும் பிஸியாக இருந்த காரணத்தால் படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படாமல் இருந்தது. ஆனால், இப்போது பிஸி எல்லாம் முடிந்து இருவரும் வாடிவாசலுக்கு நேரத்தை ஒதுக்கி படத்தை தொடங்கவிருப்பதாக தெரிகிறது.

படத்திற்கு இசையமைக்கும் ஜிவி பிரகாஷ் மங்களகரமா படத்தை பாட்டில் இருந்து ஆரம்பிக்கிறோம் என்பது போல வாடிவாசல் படத்தின் முதல் பாடல் இன்று இசையமைக்கப்பட்டதாக அறிவித்துள்ளார். இதன் மூலம், வாடிவாசல் படம் தொடங்கியது தெரியவந்துள்ளது. இந்த தகவலை இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

அதைப்போல வாடிவாசல் குறித்து தயாரிப்பாளர் தாணுவும் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். அதில் பேசிய அவர் ” வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் முதல் தொடங்கப்படவுள்ளது. நான் வெற்றிமாறன் சூர்யா ஆகியோர் சமீபத்தில் சந்தித்து பேசினோம். இப்போது நான் இங்கு பேசிக்கொண்டு இருக்கிறேன். மதுரையில் படப்பிடிப்பு நடத்துவதற்கும் தங்குவதற்கும் சரியான இடத்தை படக்குழு பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். அசுரன் மாதிரியான படத்தை எனக்கு வெற்றி கையில் கொடுப்பார் என ஆவலுடன் காத்திருக்கிறேன்” எனவும் தாணு தெரிவித்திருக்கிறார்.

ஒரு வழியாக வாடிவாசல் படம் எப்போது தான் தொடங்கப்படும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், இப்போது பாடல்கள் இசையமைப்பு பனி தொடங்கியுள்ளதாக ஜிவி பிரகாஷ் தெரிவித்திருப்பதும், படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கவுள்ளதாக தாணுவும் தெரிவித்துள்ளது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விரைவில் வாடிவாசல் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்