பஞ்சாப் ரொம்ப உக்கிரமா இருப்போம்! எதிரணிக்கு எச்சரிக்கை விட்ட பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்!

இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியை நாங்கள் எந்த அழுத்தமும் இல்லாமல் விளையாடப்போகிறோம் என பஞ்சாப் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.

ricky ponting about punjab kings

பஞ்சாப் : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 22-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ள நிலையில், போட்டியில் விளையாடும் அணிகள் தீவிரமாக பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது. எனவே, ஒவ்வொரு அணியை சேர்ந்த வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் இந்த முறை நாங்கள் சிறப்பான ஆட்டத்தை கொடுப்போம் என பேசி வருகிறார்கள். அந்த வகையில், பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு பயிற்சியாளராகியிருக்கும் ரிக்கி பாண்டிங் இந்த வருடம் நாங்கள் எதிரணியை தோற்கடிக்க கூடிய அளவுக்கு ஆக்ரோஷமாக விளையாடும் அணியாக இருப்போம் என பேசியிருக்கிறார்.

இது குறித்து ஊடகத்திற்கு பேட்டியளித்த போது பேசிய அவர் ” இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் எங்களுடைய முதல் போட்டி எப்போது தொடங்கும் என நான் ஆவலுடன் காத்திருக்கிறேன். எங்கள் மீது எப்படி விளையாடப்போகிறோம் என்கிற எந்த அழுத்தமும் இல்லை. அழுத்தம் எதுவும் இருந்தாலும் அதனை தூக்கி ஓரம் வைத்துவிட்டு பொழுதுபோக்காக கிரிக்கெட் விளையாடப்போகிறோம். நாங்கள் இழப்பதற்கு எங்களிடம் ஒன்றும் இல்லை.. எனவே, இந்த வருடம் அதிரடியாக விளையாடப்போகிறோம்.

அந்த அதிரடியான ஆட்டம் எப்படி இருக்கும் என்பதை முதல் போட்டியில் பார்க்க நான் ஆவலுடன் காத்திருக்கிறேன். வருகின்ற 25-ஆம் தேதி குஜராத் அணிக்கு எதிராக அஹமதாபாத்தில் எங்களுடைய முதல் போட்டி நடைபெறவிருக்கிறது. அந்த போட்டியில் எதிரணியை அதிரவைக்கும் வகையில் எங்களையுடைய x1 இருக்கும். அந்த போட்டியில் நாங்கள் மிகவும் துணிச்சலாகவும் விளையாடுவோம். அந்த போட்டியில் மட்டுமில்லை இந்த ஆண்டு நடைபெறவுள்ள அணைத்து போட்டிகளிலும் நாங்கள் அப்படி தான் விளையாடுவோம் ” எனவும் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.

தோல்வியோ..வெற்றியோ அதிரடியாக தான் விளையாடப்போகிறோம் என பஞ்சாப் கிங்ஸ் அணியின் ரிக்கி பாண்டிங் பேசியிருப்பது எதிரணிக்கு எச்சரிக்கை விடும் வகையில் இருக்கிறது. எனவே, இவருடைய பேச்சை பார்த்த ரசிகர்கள் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டி சும்மா தாறுமாறா இருக்கப்போகுது என பேசி வருகிறார்கள்.

பஞ்சாப் அணி வீரர்கள்

ஷ்ரேயஸ் ஐயர் (கேப்டன்), யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங், மார்கஸ் ஸ்டோனிஸ், க்ளென் மேக்ஸ்வெல், ஷஷாங்க் சிங், பிரப்சிம்ரன் சிங், ஹர்ப்ரீத் ப்ரார், விஜய்குமார் வைஷாக், யாஷ் தாக்கூர், மார்கோ ஜான்சன், ஜோஷ் இங்கிலிஸ், லாக்கி பெர்குசன், அஸ்மத்துல்லா, அஸ்மத்துல்லா, கே இ, முஷீர் கான், சூர்யன்ஷ் ஷெட்ஜ், சேவியர் பார்ட்லெட், பைலா அவினாஷ், பிரவின் துபே, நேஹால் வதேரா, லாக்கி பெர்குசன்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்