ரயில்வே தேர்வுக்கு தயாரான தேர்வர்கள்! RRB ஒட்டிய ‘ரத்து’ நோட்டீஸ்!
இன்று (மார்ச் 19) நடைபெற இருந்த RRB உதவி லோகோ பைலட் தேர்வுகள் முன்னறிவிப்பின்றி திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. மாற்று தேர்வு தேதியும் அறிவிக்கப்படவில்லை.

டெல்லி : இன்று இந்திய ரயில்வே துறையின் சார்பாக காலியாக உள்ள 32,438 RRB லோகோ பைலட் பணியிடங்களுக்கு தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த தேர்வானது காலை மாலை என இரு ஷிப்டகளாக நடைபெற இருந்தது.
இதற்காக தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டு இன்று காலை தேர்வு எழுத தேர்வர்கள் சென்று மையங்களுக்கு சென்றுவிட்டனர். ஆனால் இறுதி நேரத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக நாடு முழுவதும் நடைபெற இருந்த லோகோ பைலட் தேர்வு ரத்து செய்யப்படுவதாக நோட்டீஸ் மூலம் அறிவிக்கப்பட்டுவிட்டது.
பல்வேறு தேர்வு மையங்களில் சர்வர் பிரச்சனை காரணமாக தேர்வு ரத்து செய்ப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. மாற்று தேர்வு தேதி பற்றி தேர்வர்களுக்கு SMS வாயிலாக தகவல் அனுப்பப்படும் என நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் வெளி மாநிலங்களுக்கு தேர்வு எழுத சென்ற தேர்வர்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.
இந்த RRB உதவி லோகோ பைலட் (RRB ALP) தேர்வர்களுக்கு தேர்வு மையங்கள் ஒதுக்குவதில் சிலபல குளறுபடிகள் நிலவின. தமிழ்நாட்டில் உள்ளவர்களுக்கு அண்டை மாநிலங்களான ஆந்திரா, தெலுங்கானாவில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டன. சுமார் 6 ஆயிரம் தேர்வர்களுக்கு தெலுங்கானா தலைநகர் ஹைதிராபாத்தில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டன.