பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்ஸ்… குறித்த நேரத்தில் கடலில் இறங்கிய டிராகன் விண்கலம்.!

17 மணி நேர பயணத்துக்கு பிறகு ஸ்பேஸ் எக்ஸ்-ன் டிராகன் விண்கலம் ஃபுளோரிடா கடற்பரப்பில் வெற்றிகரமாக தரையிறங்கியது.

Sunita Williams -Crew 9

ஃபுளோரிடா : இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும்  புட்ச் வில்மோர் ஆகியோர் 9 மாதங்களுக்கு மேல் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்த பின்னர், இன்று (மார்ச் 19) வெற்றிகரமாக பூமிக்குத் திரும்பினார். சரியாக குறித்த நேரத்தில் அதிகாலை 3.27 மணிக்கு டிராகன் விண்கலம் ஃபுளோரிடா கடற்பரப்பில் வெற்றிகரமாக தரையிறங்கியது.

4 பாராசூட் உதவியுடன் வேகத்தை குறைத்து பத்திரமாக கேப்சூல் தரையிறங்கியதும், உடனே நாசா குழுவினர் அதை சிறிய படகுகள் மூலம் கப்பலுக்கு கொண்டு வந்தனர். மீட்புக் கப்பல் அதைத் தூக்கிய பிறகு, கேப்சூல் கதவு திறக்கப்பட்டு சுனிதாவும், 4 விண்வெளி வீரர்களும் வெளியே கொண்டு வரப்பட்டனர். அந்த 4 விண்வெளி வீரர்கள் பத்திரமாக வெளியே அழைத்து வரப்பட்டு, மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

நாசா இந்த தரையிறக்க நிகழ்வை நேரடியாக ஒளிபரப்பு செய்தது, மேலும் உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்கள் தங்கள் உள்ளூர் நேரப்படி இதைக் கண்டனர். 286 நாள்களுக்கு பிறகு மீண்டும் பூமியில் கால் பதித்த சுனிதா வில்லியம்ஸ், வில்மோருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இவர்கள் இருவரும் கடந்த 2024 ஜூன் மாதம் 5ஆம் தேதி, போயிங் நிறுவனத்தின் ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு எட்டு நாள் ஆய்வுப் பயணமாகச் சென்றனர். ஆனால், விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக அவர்களால் திட்டமிட்டபடி திரும்ப முடியவில்லை. இதனால், அவர்களது பயணம் எதிர்பாராத விதமாக 9 மாதங்களாக நீடித்தது.

தரையிறங்கிய நேரம்

மற்றும்  புட்ச் வில்மோர் ஆகியோர் பூமிக்குத் திரும்பிய தருணம் அமெரிக்க உள்ளூர் நேரப்படி மார்ச் 18, 2025 மாலை 5:57 மணி (EDT)அதே நேரம், இந்திய நேரப்படி மார்ச் 19, 2025 அதிகாலை 3:27 மணி (IST) ஆகும். இந்திய நேரம் அமெரிக்க கிழக்கு நேரத்தை விட 9 மணி நேரம் 30 நிமிடங்கள் முன்னால் உள்ளது (EDT மற்றும் IST இடையிலான நேர வித்தியாசம்).

பயணத்தின் தொடக்கம் மற்றும் சிக்கல்கள்

சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் நாசாவின் (NASA) சார்பில், போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தின் முதல் மனிதர்களைக் கொண்ட சோதனைப் பயணத்தில் பங்கேற்றனர். இந்தப் பயணம் வெறும் 8 நாட்களுக்கு மட்டுமே திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், விண்கலத்தில் ஹீலியம் வாயுக் கசிவு மற்றும் த்ரஸ்டர்களில் ஏற்பட்ட பழுது போன்ற பிரச்சினைகள் காரணமாக, அவர்களை பாதுகாப்பாக பூமிக்கு அழைத்து வருவது சாத்தியமாகவில்லை. இதனால், ஸ்டார்லைனர் விண்கலம் காலியாகவே பூமிக்குத் திரும்பியது.

இதன் காரணமாக சுனிதாவும் புட்சும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்து, அங்கு ஆய்வுப் பணிகளைத் தொடர்ந்து செய்தனர். விண்வெளி ஆய்வு மையத்தில் சுனிதா வில்லியம்ஸ் குழுவினர் 900 மணி நேரம் ஆய்வு செய்துள்ளனர். உடற்பயிற்சி கருவியை வடிவமைத்தல் உள்ளிட்ட 150 அறிவியல் ஆய்வுகளில் ஈடுபட்டதாக நாசா அறிவித்துள்ளது

மீட்பு முயற்சிகள்

இதையடுத்து நாசா இந்த சிக்கலைத் தீர்க்க பல மாதங்கள் திட்டமிட்டது. இறுதியாக, எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX) நிறுவனத்தின் க்ரூ டிராகன் விண்கலத்தைப் பயன்படுத்தி அவர்களை மீட்க முடிவு செய்யப்பட்டது. க்ரூ-10 என்ற பணிக்குழு, நான்கு விண்வெளி வீரர்களுடன் கடந்த மார்ச் 15 ம் தேதி அன்று பால்கன் 9 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது. இந்தக் குழு சர்வதேச விண்வெளி நிலையத்தை மார்ச் 16 அன்று சென்றடைந்து. பின்னர், அங்கிருந்து சுனிதா மற்றும் புட்ச் ஆகியோர் க்ரூ டிராகன் விண்கலத்தில் பூமிக்குத் திரும்பினர்.

உடல்நல சவால்கள்

விண்வெளியில் நீண்ட காலம் தங்கியிருப்பது உடல்நலத்தில் பல சவால்களை ஏற்படுத்தலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். புவியீர்ப்பு சக்தி இல்லாத சூழலில் 9 மாதங்கள் செலவிட்டதால், சுனிதாவுக்கு எலும்பு அடர்த்தி குறைவு, தசை பலவீனம், கண் பிரச்சினைகள் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டது.

பூமிக்குத் திரும்பிய பிறகு, அவர்கள் மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு, படிப்படியாக புவியீர்ப்புக்கு ஏற்ப உடலைப் பழக்கப்படுத்தும் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். அங்கு அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு 45 நாள்கள் தொடர் சிகிச்சை, பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
Chennai Corporation Budget 2025
TN Ration shop
Sunita Williams - NASA
TN CM MK Stalin - Sunita Williams
Putin - Trump - Zelensky
sunita williams