பூமி திரும்பும் சுனிதா வில்லியம்ஸ்..சம்பளம், சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

சுனிதா வில்லியம்ஸின் சொத்துமதிப்பு மொத்தம் 40 கோடிகளுக்கு மேல் இருக்கும் என தகவல்கள் வெளியாகி தீ போல பரவி வருகிறது.

sunita williams salary

கலிபோர்னியா : விண்வெளியில் சிக்கியிருந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோரை பத்திரமாக மீட்க டிராகன் விண்கலம்   கடந்த மார்ச் 15 அன்று காலை புறப்பட்டு சென்றது. அதில், அன் மெக்லெய்ன் (நாசா), நிக்கோல் ஏயர்ஸ் (நாசா), டாகுயா ஓனிஷி (ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனம் – ஜாக்சா), கிரில் பெஸ்கோவ் (ரோஸ்கோஸ்மோஸ் – ரஷ்யா) என மொத்தம் 4 பேர் பயணம் செய்ததாகவும், இன்று மார்ச் 18, SpaceX Crew Dragon விண்கலத்தின் மூலம் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து தற்போது புறப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் நாசா தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

பல்வேறு தடைகளை தாண்டி ஒரு வழியாக அவர்கள் இருவரும் வருகின்ற மார்ச் 19-ஆம் தேதி இந்திய நேரப்படி அதிகாலை 3.27 மணிக்கு பூமியில் டிராகன் விண்கலம் மூலம் தரையிறங்கவுள்ளார்கள். இது புளோரிடா கடற்கரையில் விண்கலம் பாரசூட்டுகள் மூலம் பாதுகாப்பாக தரையிறங்கும் தோராயமான நேரமாகும். உலகமே அவர்கள் பூமிக்கு திரும்புவதை பார்க்க ஆவலுடன் காத்துள்ளது.

இதற்கிடையில் அவர் 9 மாதங்களாக விண்வெளியில் இருந்த காரணத்தால் அவருக்கு வழக்கமாக வழங்கப்படும் சம்பளம் கொடுக்கப்படுமா? அல்லது அதே சம்பளம் தான் கொடுக்கப்படுமா என்கிற கேள்விகள் எழுந்தது. எனவே, ஓய்வுபெற்ற நாசா விண்வெளி வீரர் கேடி கோல்மேன் பேசியதை வைத்து அவர்களுக்கு எவ்வளவு சம்பளம் கிடைத்திருக்கும் என்பது குறித்த தகவலும் வெளியாகி இருக்கிறது. அத்துடன் சுனிதா வில்லியம்ஸ் சொத்துமதிப்பு குறித்த விவரமும் வெளியாகி இருக்கிறது.

சம்பளம் எவ்வளவு? 

சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் இருவருக்கும் ஒரு ஆண்டுக்கு ரூ.1.08 கோடி முதல் ரூ.1.41 கோடி வரை சம்பளம் வழங்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இது அவர்களுக்கு வழக்கமாக வழங்கப்படும் சம்பளம் எனவும், அவர்கள் கூடுதலாக விண்வெளி மையத்தில் சிக்கி இருந்த காரணத்தால் மொத்தமாக 287 நாட்கள் சேர்த்து ஒரு நாளைக்கு இந்திய மதிப்பின் படி ரூ.347  வைத்து மொத்தமாக அவர்கள் இருந்த நாட்களையும் தின சம்பளத்தை கணக்கு செய்து  1 லட்சம் வரை மட்டுமே கிடைக்கும் எனவும்,  அதிகமான சம்பளம் அவர்களுக்கு கிடைக்க வாய்ப்பு குறைவு எனவும் ஓய்வுபெற்ற நாசா விண்வெளி வீரர் கேடி கோல்மேன் முக்கிய தகவலை தெரிவித்திருக்கிறார். இந்த தகவலை பார்த்த நெட்டிசன்கள் இவ்வளவு நாள் இருந்ததற்கு இவ்வளவு தான் சம்பளமா? என ஆச்சரியத்துடன் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

சொத்துமதிப்பு? 

ஆண்டுக்கு 1 கோடிகளுக்கு மேல் சம்பளம் வாங்கும் சுனிதா வில்லியம்ஸின் சொத்து மதிப்பு குறித்த விவரங்களும் வெளியாகி இருக்கிறது. அதன்படி, சுனிதா வில்லியம்ஸ் சொத்து மதிப்பு மொத்தம் அமெரிக்க டாலர் படி $5 மில்லியன் என்று கூறப்படுகிறது, இந்திய மதிப்பின் படி ரூ.41-43 கோடி வரை அவருடைய சொத்து மதிப்பு இருக்கலாம் எனவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. நாசாவிடம் இருந்து வாங்கும் சம்பளம்  போக சொந்தமாக சுனிதா வில்லியம்ஸ் முதலீடு செய்து பணம் சம்பாதிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்