மழைக்கு வாய்ப்பு உண்டா? ‘அடுத்த 6 நாட்களுக்கு இதுதான் நிலைமை ‘ – வானிலை மையம் அப்டேட்.!
தமிழ்நாட்டில் மாலை 4 மணி 8 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

சென்னை : தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில் இன்று (மார்ச்.17) முதல் அடுத்த 6 நாட்களுக்கு ஒரு சில பகுதிகளில், லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டில் மாலை 4 மணி வரை நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, நெல்லை, மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
— IMD-Tamilnadu Weather (@ChennaiRmc) March 17, 2025
வெப்பநிலை நிலவரம்
அதிகபட்ச வெப்பநிலையாக வேலூரில் 37.0° செல்சியஸ் பதிவாகியுள்ளது. குறைந்தபட்ச வெப்பநிலை கரூரின் பரமத்தி பகுதியில் 21.5° செல்சியஸ் பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் அதிகபட்ச வெப்பநிலையில் பொதுவாக பெரிய மாற்றம் ஏதுமில்லை. தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 3-5 செல்சியஸ் குறைந்துள்ளது.
அதிகபட்ச வெப்பநிலை
இன்று முதல் 21ம் தேதி வரை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு தான் என்றும்,அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் சற்று குறையக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று முதல் 21ம் தேதி வரை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டி இருக்கக்கூடும்.
சென்னை நிலவரம்
இன்று (17-03-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
தமிழகம், புதுவைமற்றும்காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை அறிக்கைhttps://t.co/467dVuUdtd pic.twitter.com/kJppqtjso3
— IMD-Tamilnadu Weather (@ChennaiRmc) March 17, 2025