சபாநாயகர் அப்பாவுக்கு எதிராக அதிமுகவின் நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி!

அதிமுக கொண்டு வந்த தீர்மானம் வெற்றியடைய 118 வாக்குகள் தேவை. இந்த சூழலில், திமுக மற்றும் அதன் கூட்டணி உறுப்பினர்கள் சபாநாயகருக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

TN Assembly - Speaker Appavu

சென்னை : தமிழக சட்டப்பேரவையில் இன்று பட்ஜெட் மீதான விவாதம் மற்றும் கேள்வி பதிலுக்காக கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் முக்கிய நிகழ்வாக சபாநாயகர் அப்பாவுக்கு எதிராக எதிர்க்கட்சியான அதிமுக சார்பில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

இதற்கு முன்னதாக அதிமுகவினர், சபாநாயகரின் பதவி நடவடிக்கைகள் மற்றும் சட்டப்பேரவையை நடத்தும் முறை குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தனர். சபாநாயகர் பாரபட்சமாக செயல்படுவதாகவும், எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு போதுமான வாய்ப்பு அளிக்கவில்லை என்றும் கூறியிருந்தனர்.

இந்நிலையில், நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் நடைபெற்று வந்த நிலையில், இந்த தீர்மானம் மீதான விவாதம் சட்டப்பேரவையில் நடைபெற்று, வாக்கெடுப்பு மூலம் முடிவு எட்டப்பட்டது. ஆளும் கட்சியான திமுகவுக்கு பெரும்பான்மை உள்ளதால், இந்த தீர்மானம் நிறைவேறவில்லை என்று தெரிகிறது.

2 முறை நடத்தப்பட்ட குரல் வாக்கெடுப்பு தோல்வியில் முடிந்த நிலையில், குரல் வாக்கெடுப்பில் நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்த நிலையில் டிவிஷன் வாக்கெடுப்புக்கு கோரிக்கை வைத்துள்ளனர். கோரிக்கையை ஏற்று  டிவிஷன் முறையில் மீண்டும் வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.

இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் சட்டப்பேரவையில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, ஆளும் கட்சியான திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தன. திமுகவின் தலைமையிலான அரசுக்கு சட்டப்பேரவையில் தற்போது பெரும்பான்மை உள்ளது. அதாவது, 234 உறுப்பினர்களைக் கொண்ட சட்டப்பேரவையில் திமுக கூட்டணி சுமார் 159 இடங்களை வைத்துள்ளது. அதிமுகவோ 66 இடங்களுடன் எதிர்க்கட்சியாக உள்ளது.

அதிமுக கொண்டு வந்த தீர்மானம் வெற்றியடைய 118 வாக்குகள் தேவை. இந்த சூழலில், திமுக மற்றும் அதன் கூட்டணி உறுப்பினர்கள் சபாநாயகருக்கு ஆதரவாக வாக்களித்தனர். இறுதியில், வாக்கெடுப்பு முடிவுகள் அறிவிக்கப்பட்டபோது, நம்பிக்கையில்லா தீர்மானம் பெரும்பான்மை ஆதரவு பெறாததால் தோல்வியடைந்தது. இதன் மூலம், சபாநாயகர் அப்பாவின் பதவி தொடர்ந்து நீடிப்பது உறுதியாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்