LIVE : தமிழ்நாடு பட்ஜெட் விவாதம் முதல்… பாகிஸ்தான் குறித்து பிரதமர் மோடி கருத்து வரை.!
தமிழ்நாடு பட்ஜெட் விவாதம் முதல் பாகிஸ்தான் குறித்து பிரதமர் மோடி கருத்து வரை இன்றயை முக்கியமான செய்திகள் கீழே கொடுக்கப்பட்டு வருகிறது.

சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று நடைபெறுகிறது. சட்டப்பேரவை கூடியதும் மறைந்த எம்எல்ஏக்கள் மற்றும் டாக்டர் செரியன் உள்ளிட்டோருக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டு, கேள்வி நேரம் தொடங்கும். அதன் பின் அதிமுக சார்பில் சபாநாயகர் மீது கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு கோரப்படலாம். உடனடியாக அதை ஏற்கும்பட்சத்தில் துணை சபாநாயகர் அவையை வழிநடத்திச் செல்வார்.
தனியார் பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, “பாகிஸ்தானுடன் அமைதியை ஏற்படுத்த பலதடவை முயற்சி எடுத்துள்ளேன். ஆனால், நாங்கள் எடுத்த ஒவ்வொரு உன்னதமான முயற்சிக்கும் துரோகமும், பகையுமே பதிலாக கிடைத்தன. இருதரப்பு உறவை மேம்படுத்த வேண்டும் என்ற எண்ணம், பாகிஸ்தான் தலைமைக்கு வரும் என்று நிச்சயமாக நம்புகிறோம்” என்று கூறியுள்ளார்.