“வேளாண் பட்ஜெட் பெயரில் பொய், புரட்டு” – அண்ணாமலை கடும் விமர்சனம்.!
நெல்லுக்கு ரூ.2,500, கரும்புக்கு ரூ.4,000 குறைந்தபட்ச ஆதரவு விலை என்ற வாக்குறுதிகள் கூட பட்ஜெட்டில் இடம்பெறவில்லை என அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னை : 2025 – 2026 ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை அத்துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து, பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். குறிப்பாக ரூ.42 கோடி மதிப்பீட்டில் மாநிலம் முழுவதும் 1,000 உழவர் சேவை மையங்கள், கோடை உழவு செய்ய ஹெக்டேருக்கு ரூ.2,000 மானியம் உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
இந்த நிலையில், இன்று தாக்கல் செய்யப்பட்ட வேளாண் பட்ஜெட்டை அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார். பயிர்க்கடன் ரூ.1,774 கோடி இன்னும் தள்ளுபடி செய்யப்படவில்லை என பட்ஜெட்டில் கூறப்பட்டதை சுட்டிக்காட்டிய அண்ணாமலை, முன்னதாக இதை நாங்கள் கூறிய போது அமைச்சர் பெரியகருப்பன் ஏற்க மறுத்ததாக விமர்சித்திருந்தார்.
பல ஆயிரம் கோடி ஊழல் மட்டுமே செய்து, தேர்தல் வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாமல், விளம்பரத்துக்காக வெற்று அறிவிப்புகளை மட்டும் உள்ளடக்கி ஒவ்வொரு ஆண்டும் தி.மு.க., வெளியிடும் பட்ஜெட்டும், இது போன்று காலியாக இருப்பதில் வியப்பில்லை.
வேளாண் பட்ஜெட் என்ற பெயரில் பொய்யும் புரட்டுமாக ஒன்றை தாக்கல் செய்துள்ளது திமுக அரசு. தமிழ்நாட்டில் சாகுபடி பரப்பு கடந்த ஆண்டை விட 4 லட்சம் ஏக்கர் குறைந்திருக்கிறது. 664 வருடங்களுக்கு முன்புள்ள சாகுபடி பரப்புடன் ஒப்பிட்டு தமிழர்களை முட்டாள்கள் என்று நினைக்கிறது திமுக?.
நெல்லுக்கு ரூ.2,500, கரும்புக்கு ரூ.4,000 ஆதார விலை என்ற வாக்குறுதிகள் பேச்சளவிலேயே போய்விட்டது. விவசாயிகளைத் தொடர்ந்து வஞ்சித்து வருவதையே வேலையாக வைத்திருக்கும் திமுக அரசின் இந்த வேளாண் பட்ஜெட், வெறும் காகிதக் குவியலே தவிர வேறொன்றுமில்லை ” என்று குறிப்பிட்டுள்ளார்.
வேளாண் பட்ஜெட் என்ற பெயரில் பொய்யும் புரட்டுமாக ஒன்றை தாக்கல் செய்திருக்கிறது திமுக அரசு. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்கள். திமுகவின் பட்ஜெட் மொத்தமுமே பொய்களும் புரட்டுகளுமாகத்தான் இருக்கிறது. இந்தப் பொய்களைப் பொது இடங்களில் ஒளிபரப்பினால், மக்கள் வந்து பார்ப்பார்கள்…
— K.Annamalai (@annamalai_k) March 15, 2025