தவெக திருநெல்வேலி கிழக்கு மாவட்ட செயலாளர் சஜி காலமானார் – விஜய் இரங்கல்.!

தமிழக வெற்றிக் கழகத்தின் திருநெல்வேலி வடக்கு மாவட்டச் செயலாளர் சஜி மறைவுவுக்கு விஜய் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொண்டார்.

tvk vijay

சென்னை : தமிழக வெற்றி கழகத்தில் பெரும் கனவுடன் அரசியல் வாழ்க்கையை தொடங்கிய சஜி, மாரடைப்பால் மறைந்தது அக்கட்சியினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. முதலில் விஜய் மக்கள் இயக்கத்தில் தென் மாவட்டங்களில் சிறப்பாக செயல்பட்டு வந்த அவரை அங்கீகரிக்கும் வகையில், திருநெல்வேலி வடக்கு மாவட்ட செயலாளர் பதவி வழங்கப்பட்டது.

சென்னையில், வரும் 28ம் தேதி பொதுக்குழு கூட்டம் நடைபெறுவதால் அது தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க சென்னை சென்றபோது உயிர் பிரிந்தது. அதாவது, சென்னையில் நேற்று நள்ளிரவு திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, அருகில் இருந்தவர்கள் அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். ஆனால், வழியிலேயே அவர் மரணமடைந்தார் என்று சொல்லப்படுகிறது. இவரது மரணத்திற்கு பலரும் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தற்போது, தவெக தலைவர் விஜய் தனது எக்ஸ் தள வாயிலாக இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது பதிவில், “தமிழக வெற்றிக் கழகத்தின் திருநெல்வேலி வடக்கு மாவட்டச் செயலாளராகப் பொறுப்பு வகித்து வந்த அன்பிற்குரிய சகோதரர் திரு.சஜி (எ)அந்தோணி சேவியர் அவர்கள் காலமானது, மிகுந்த அதிர்ச்சியையும் மன வேதனையையும் அளிக்கிறது.

என் மீதும் கழகத்தின் மீதும் அளவற்ற அன்பு கொண்டு கழகப் பணியாற்றி வந்தவர். அவரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்