தமிழக வேளாண் பட்ஜெட் 2025 – 2026 : வெளியான முக்கிய அறிவிப்புகள் இதோ….
இன்று தமிழக சட்டபேரவையில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த தமிழக வேளாண் பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாகி உள்ளன.

சென்னை : தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் 2025 2026-ஐ வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இதில் கடந்த 4 ஆண்டுகளில் வேளாண்துறையில் முன்னெடுக்கப்பட்டுள்ள திட்டங்கள் குறித்தும் , அதன் பலன்கள் குறித்தும் பேசினார். அதன் பிறகு வேளாண் பட்ஜெட்டை வாசிக்க தொடங்கினார். அதில் விவசாய நலன் சார்ந்து பல்வேறு புதிய திட்டங்கள், ஏற்கனவே செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு ஆகியவை பற்றியும் அறிவித்தார்.
தமிழக வேளாண் பட்ஜெட் 2025 – 2026-ல் குறிப்ப்பிடப்பட்டுள்ள முக்கிய அறிவிப்புகள் :
வேளாண் வளர்ச்சி திட்டம் :
- அனைத்து கிராமங்களும் தன்னிறைவு பெறும் நோக்கத்தில் தரிசு நிலங்களை விளைநிலங்களாக மாற்றி உழவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்திட கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 2025 – 2026 ஆண்டுகளில் 2,336 கிராமத்தில் 9,36,000 விவசாயிகள் பயனடையும் வகையில் ரூ.269.50 கோடியின் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
புதிய பம்புசெட்டுகள் :
- புதிய மின்மோட்டார் பம்புசெட்டுகள் வாங்கிட, பழைய மின்மோட்டார் பம்புசெட்டுகளை மாற்றிட 1000 விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படும். இதற்காக 1.5 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
சூரிய சக்தி பம்புசெட்டுகள் :
- மின்சார இணைப்பு இல்லாத 1000 விவசாயிகளுக்கு தனித்துச் சூரியசக்தியால் இயங்கக்கூடிய பம்புசெட்டுகள் அமைக்க ரூ.24 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இயற்கை வேளாண்மை திட்டம்:
- 37 மாவட்டங்களில் ரூ.12 கோடி செலவில் இயற்கை வேளாண்மை திட்டம் செயல்படுத்தப்படும்.
- தமிழ்நாட்டில் உற்பத்தியாகும் இயற்கை வேளாண்மை பொருட்களை சந்தைப்படுத்த அரசு கட்டிடங்களில் விற்பனை வசதிகள் ஏற்படுத்தப்படும்.
சிறப்பு முகாம்கள் :
- தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமங்களில் மாதம் 2 முறை உழவர் நலத்துறை சார்பில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும்.
சேமிப்பு கிடங்குகள் :
- 9 ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் தலா 1000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட சேமிப்பு கிடங்குகள் அமைக்கப்படும். இதற்காக ரூ.20 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
இ-வாடகை செயலி :
- இ-வாடகை செயலி மூலம் வேளாண் இயந்திரங்களை வாடகைக்கு வழங்குவதை வலுப்படுத்த ரூ.17.37 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- 7900 பவர் டீலர், 6,000 விசை களைஎடுப்பான் ஆகிய வேளாண் சாகுபடி இயந்திர கருவிகள் ஆகியவை மானியத்தில் வழங்கப்படும்.
- விவசாய தொழிலாளர் பற்றாக்குறையை தீர்க்க டிராக்டர் உள்ளிட்ட 603 இயந்திரங்கள் இ- வாடகை செயலி மூலம் குறைந்த வாடகைக்கு விடப்படும்
சிறு தானிய இயக்கம்:
- சிறு தானியங்களை ஊக்குவிக்க ரூ.52 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மலர் சாகுபடி :
- மலர்கள் சாகுபடி செய்யும் உழவர்களுக்கு மானியம் வழங்கிட ரூ.8.51 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- மதுரை மல்லிக்கான சிறப்பு திட்டத்தின் கீழ் 3 ஆயிரம் ஏக்கரில் மல்லி பயிர் செய்ய ஊக்குவிக்கப்படும்.
- ரோஜா மலர் சாகுபடியை ஊக்குவிக்க ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
டெல்டா அல்லாத மாவட்டங்களுக்கான சிறப்பு திட்டம்:
- டெல்டா பகுதிகள் அல்லாத மாவட்டங்களில் பயிர் சாகுபடியை அதிகரிக்க ரூ.102 கோடி மதிப்பிலான சிறப்பு தொகுப்பு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
தரமான விதைகள் வழங்கல்:
- உழவர்களுக்கு தரமான விதைகளை வழங்குவதற்காக ரூ.52 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஆராய்ச்சி நிதி :
- வேளாண்மையில் புதிய கண்டுபிடிப்புகளுக்காக டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிதி எனும் திட்டம் உருவாக்கப்படும். இதற்கு ரூ.1 கோடி நிதி ஒதுக்கப்படும்.
நம்மாழ்வார் விருது :
- உயிர்ம வேளாண்மையில் சிறந்து விளங்கும் 3 விவசாயிகளுக்கு நம்மாழ்வார் விருது வழங்கப்படும்.
கோடை உழவு மானியம்:
- 3 லட்சம் ஏக்கர் நிலத்தில் கோடை உழவு செய்ய ரூ.24 கோடி மானியமாக வழங்கப்படும்.
தர நிர்ணய ஆய்வகங்கள் :
- சென்னை, கோயம்புத்தூர், தூத்துக்குடி, மதுரையில் உயிர்ம வேளாண் விளைபொருட்களுக்கு தர நிர்ணய ஆய்வகங்கள் அமைக்கப்படும்.இதற்காக ரூ.6.16 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
இளைஞர்களுக்கு வேளாண் தொழில் மானியம்:
- 435 இளைஞர்களுக்கு வேளாண் தொழில் தொடங்க தலா ஒரு லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்பட்டுள்ளது.
ஆழ்துளை கிணறுகள் மற்றும் விற்பனை கூடங்கள்:
- 1,511 ஆழ்துளை மற்றும் குழாய் கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன.
- 172 ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின உழவர்கள்:
- 15,700 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின உழவர்கள் இதுவரை பயனடைந்துள்ளனர்.
மலை வாழ் உழவர்கள் :
- 63 ஆயிரம் மலைவாழ் உழவர்கள் பயன் பெரும் வகையில் ரூ.22 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு மலை வாழ் உழவர் முன்னேற்ற திட்டம் செயல்படுத்தப்படும்.
காலநிலை மாற்றம் :
- காலநிலை மாற்றத்தினால் விவசாயம் மற்றும் சுற்றுசூழலில் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ள திறனுடைய கிராமங்கள் உருவாக்கப்படும். இதற்காக ரூ.1.35 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
முதலமைச்சர் உழவர் பாதுகாப்பு திட்டம் :
- நிலமற்ற வேளாண் தொழிலாளர்கள் நலன் கருதி அவர்களுக்கான விபத்து நிவாரண இழப்பீடு ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சமாக உயர்த்தப்படும்.
- நிலமற்ற வேளாண் தொழிலாளர்களுக்கு உடல் உறுப்பு இழப்பீடு நிவாரண தொகை ரூ.20 ஆயிரத்திலிருந்து ரூ.1 லட்சமாக உயரத்தப்ட்டுள்ளது.
- நிலமற்ற வேளாண் தொழிலாளர்களின் இயற்கை மரணதிற்கு ரூ.20 ஆயிரம் நிவாரண தொகை ரூ.30 ஆயிரமாக உயரத்தப்பட்டுள்ளது. இறுதி சடங்கு நிவாரணம் ரூ.2500-ல் இருந்து ரூ.10 ஆயிரமாக.