வெறும் காகிதம் மாதிரி இருக்கு! பட்ஜெட் அறிவிப்பு…அண்ணாமலை விமர்சனம்!

திமுகவுக்கு வேண்டப்பட்டவர்கள் பயனடையும் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன என அண்ணாமலை குற்றம்சாட்டி பேசியிருக்கிறார்.

annamalai about tn budget 2025

சென்னை :  இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2025 2026 ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதில் மகளிர், மாற்றுத்திறனாளிகள், மாணவர்கள் பயன்படும் சில அம்சங்களும் இடம்பெற்று இருந்தது. இருப்பினும் சில முக்கியமான அம்சங்கள் குறித்த அறிவிப்பு பட்ஜெட்டில் இடம்பெறவில்லை என்கிற குற்றச்சாட்டுகளும் எழுந்திருக்கிறது.

எனவே, அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் பலரும் பட்ஜெட்டில் அந்த அறிவிப்பு இடம்பெறவில்லை..இந்த அறிவிப்பு இடம்பெறவில்லை என தன்னுடைய குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருகிறார்கள். அந்த வகையில், ஏற்கனவே அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் த.வெ.க தலைவர் விஜய் தங்களுடைய கண்டனங்களை தெரிவித்து இருந்தார்கள்.

அவர்களை தொடர்ந்து, தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது திமுகவுக்கு வேண்டப்பட்டவர்கள் பயனடையும் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன என விமர்சனம் செய்து பேசியிருக்கிறார். இது குறித்து பேசிய அவர் ” திமுக அரசு இப்போது அறிவித்துள்ள பட்ஜெட்டில் எந்த சிறப்பு அம்சங்களும் இல்லை.  சாமானிய மக்களுக்கு நான்காவது ஆண்டாக, வழக்கம்போல ஏமாற்றத்தையே திமுக பரிசளித்திருக்கிறது. திமுகவுக்கு வேண்டப்பட்டவர்கள் பயனடையும் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மற்றபடி, இந்த முறை பட்ஜெட் என்ற பெயரில் வெற்று பேப்பர் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க அரசிடம் இப்போது பணம் இல்லை. தமிழக அரசு வாங்கிய கடன் அளவு ரூ.10 லட்சம் கோடியை தாண்டிவிட்டது. எனவே, பணம் இல்லை என்கிற காரணத்தால் தான் இப்போது கடன் வாங்குகிறது. மற்றபடி,  மாநில உள்கட்டமைப்பை மேம்படுத்த தமிழக அரசு கடன் வாங்கவில்லை” எனவும் தெரிவித்தார்.

அதனைத்தொடர்ந்து பேசிய அவர் ” டாஸ்மாக் விவகாரத்தில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவியிலிருந்து நீக்க வலியுறுத்தியும் தமிழக பாஜக சார்பில் மார்ச் 17-ம் தேதி சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடைபெறும். இதை தொடர்ந்து தமிழகத்திலுள்ள 5,000 டாஸ்மாக் கடைகளின் முன்பும் முற்றுகை போராட்டம் நடக்கும்” எனவும் அண்ணாமலை கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 17042025
Vijay -Waqf Amendment Bill
Munaf Patel FINE
Dhankar
TVK Booth Committee
Madurai Temple Festival
amit shah edappadi palanisamy selvaperunthagai