“மக்களை மறந்த திமுக அரசின் பட்ஜெட்”- தவெக தலைவர் விஜய் அறிக்கை!
தமிழக பட்ஜெட் காற்றில் பறக்கவிடப்பட்ட காகித பட்டம், மக்களை பற்றி கவலைப்படாமல், தேர்தல் வாக்குறுதிகள் காற்றில் பறக்க விடப்பட்டுள்ளன என்று தவெக தலைவர் விஜய் சாட்டியுள்ளார்.

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கை 2025 – 2026 (பட்ஜெட் 2025)-ஐ நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் பெண்களுக்கான சிறப்பு திட்டங்கள், மாணவர்கள் நலன் சார்ந்த திட்டங்கள் மட்டுமின்றி தமிழர் பண்பாடு மொழி சார்ந்த முக்கிய அறிவிப்புகளும் இதில் இடம் பெற்று இருந்தன.
இருப்பினும், பட்ஜெட்டில் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு குறித்து எந்த அறிவிப்பும் இடம்பெறவில்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்திருந்தார். இந்த நிலையில், தமிழக அரசு இன்று தாக்கல் செய்த பட்ஜெட்டை தவெக தலைவர் விஜய் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பட்ஜெட்டில் உள்ள அம்சங்கள் யாவும் போலித்தனமாக இருப்பதாகவும், அவை எல்லாம் நடைமுறைக்கு வருமா? என்றும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.
மேலும், கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட கேஸ் மானியம் என்னவானது? ரேஷனில் கூடுதல் சர்க்கரை அறிவிப்பு என்னவானது? பழைய ஓய்வூதியத் திட்டம் என்னவானது என விஜய் அடுக்கடுக்காக கேள்விகள் எழுப்பியுள்ளார்.
மக்களைப் பற்றிக் கவலைப்படாமல், தேர்தல் வாக்குறுதிகளைக் காற்றில் பறக்கவிட்டு, வெற்றுக் காகிதத்தால் பட்டம் விடும் பாசாங்கு வேலையே இந்த பட்ஜெட். இந்த ஏமாற்று வேலைகளுக்கு எல்லாம் மக்கள் கொடுக்கும் மிகப் பெரிய பதிலடியாக 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் இருக்கும். இதை இந்த வெற்று விளம்பர மாடல் தி.மு.க. அரசு விரைவில் உணரும்.
பெரும்பான்மையான அறிவிப்புகளில் போலித்தனமே அதிகம் உள்ளது. சாதாரண மக்கள் பயன்பெறும் வகையில் பட்ஜெட்டில் ஏதும் இல்லை. பரந்தூர் விமான நிலைய அறிவிப்பு பரந்தூர் மக்களுக்கு இழைக்கப்படும் துரோகம்.
விளம்பர மாடல் அரசின் மறைமுக முதலாளியாக இருக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசு பட்ஜெட்டில், டெல்லியில் இருந்துகொண்டு தமிழ்நாட்டையே மறந்து ஒதுக்கியது. இந்த விளம்பர மாடல் அரசோ தமிழ்நாட்டிலேயே இருந்துகொண்டு, தமிழ்நாட்டு மக்களின் நலன்களையே மறந்துவிட்டு ஒரு பட்ஜெட்டை வெளியிட்டுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாடு பட்ஜெட் தொடர்பாக தவெக தலைவர் விஜய் வெளியிட்ட விரிவான அறிக்கை பின்வருமாறு…
— TVK Vijay (@TVKVijayHQ) March 14, 2025
லேட்டஸ்ட் செய்திகள்
காதலர்களை கவர்ந்ததா ஸ்வீட் ஹார்ட்? டிவிட்டர் விமர்சனம் இதோ!
March 14, 2025