TNBudget 2025 : மெட்ரோ ரயில் விரிவாக்கம்… 1,125 புதிய மின்சார பேருந்துகள்.!
சென்னை கிண்டியில் ரூ.50 கோடியில் பன்முனை போக்குவரத்து முனையம் அமைக்கப்படும் எனவும் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

சென்னை : தமிழ்நாடு 2025-26 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டில் மெட்ரோ ரயில் விரிவாக்கம் மற்றும் புதிய மின்சார பேருந்துகள் தொடர்பான முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.
அதன்படி, போக்குவரத்துக்குத் துறைக்கு ரூ.12,964 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். பழைய 700 டீசல் பேருந்துகளை இயற்கை எரிவாயு மூலம் (CNG) இயங்கும் பேருந்துகளாக மறுசீரமைக்க ரூ.70 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
மேலும், சென்னை, கோவை, மதுரையில் மின்சார பேருந்துகள் இயக்கப்படும். அதன்படி, தமிழ்நாடு முழுவதும் மொத்தமாக 1,125 மின் பேருந்துகள் அறிமுகம் செய்யப்படும். அதில் சென்னையில் 950, மதுரையில் 100, கோவையில் 75 மின்சார பேருந்துகள் பயன்பாட்டுக்கு வரவுள்ளன.
சென்னை விமான நிலையத்திலிருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரையிலான மெட்ரோ நீட்டிப்பு திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. இதற்கான நிதி ஒதுக்கீடு மற்றும் விரிவான திட்ட அறிக்கை (DPR) மத்திய அரசுக்கு அனுப்பப்பட உள்ளது.
தாம்பரம் – வேளச்சேரி இடையே புதிய மெட்ரோ ரயில் திட்டம் தீட்டப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. கிண்டியில் பன்முக போக்குவரத்து முனையம் கொண்டு வரப்படும். ரூ.63,846 கோடி மதிப்பீட்டில் சென்னை மெட்ரோ 2 திட்ட பணிகள் வேகமாக நடைபெறுகிறது. இந்த ஆண்டு (2025) இறுதிக்குள் இந்த மெட்ரோ வழித்தடம் பயன்பாட்டிற்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பூந்தமல்லி – போரூர் இடையே வரும் டிசம்பரில் மெட்ரோ ரயில் சேவை செயல்பாட்டிற்கு வரும் எனவும், சென்னை கிண்டியில் ரூ.50 கோடியில் பன்முனை போக்குவரத்து முனையம் அமைக்கப்படும் எனவும் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். இந்தத் திட்டங்கள் தமிழ்நாட்டின் உள்கட்டமைப்பு வளர்ச்சியையும், பொது போக்குவரத்து வசதிகளையும் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
லேட்டஸ்ட் செய்திகள்
காதலர்களை கவர்ந்ததா ஸ்வீட் ஹார்ட்? டிவிட்டர் விமர்சனம் இதோ!
March 14, 2025