TN Budget 2025 : ராமநாதபுரத்தில் நாவாய் அருங்காட்சியகம்…தொல்லியல் துறைக்கான முக்கிய அறிவிப்புகள்!
தமிழ்நாடு பட்ஜெட்டில் இடம்பெற்ற தொல்லியல் துறைக்கான அறிவிப்புகள் பற்றி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சென்னை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2025 2026 ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். தாக்கல் செய்ததை தொடர்ந்து ஒதுக்கீடு செய்யப்படும் தொகை பற்றிய விவரங்களை அறிவித்து வருகிறார். அதில் முக்கிய அறிவிப்பாக, தொல்லியல் துறைக்கான அறிவிப்புகளும் இடம்பெற்றது.
அதன்படி, தமிழ்நாட்டில் 8 இடங்களில் தொல்லியல் அகழாய்வுகள் நடத்தப்படும். சிவகங்கை – கீழடி சேலம் – தெலுங்கனூர் கோயம்புத்தூர் – வெள்ளலூர் கள்ளக்குறிச்சி – ஆதிச்சனூர் கடலூர் – மணிக்கொல்லை தென்காசி கரிவலம்வந்தநல்லூர் தூத்துக்குடி – பட்டணமருதூர் நாகப்பட்டினம் ஆகியவற்றி தொல்லியல் அகழாய்வுகள் நடத்தப்படுவதற்கு ரூ.7 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதைப்போல, எழும்பூர் அருங்காட்சியகத்தில் ரூ.40 கோடியில் ஐம்பொன் மற்றும் செப்புத் திருமேனிகள் காட்சிக் கூடம் அமைக்கப்படும். ஈரோட்டில் ரூ.22 கோடியில் நொய்யல் அருங்காட்சியகம். ராமநாதபுரத்தில் ரூ.21 கோடியில் நாவாய் அருங்காட்சியகம் அமைக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
காதலர்களை கவர்ந்ததா ஸ்வீட் ஹார்ட்? டிவிட்டர் விமர்சனம் இதோ!
March 14, 2025