பாகிஸ்தான் ரயில் தாக்குதல்! 100 ராணுவ வீரர்கள் கொலை? BLA-வின் அடுத்த எச்சரிக்கை!
பாகிஸ்தான் அரசு மற்றும் பாதுகாப்புப் படைகள், பணயக்கைதிகளை பாதுகாப்பாக மீட்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயில் பயணிகளுடன் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. 9 பெட்டிகளில் சுமார் 500 பயணிகளுடன் வடக்கு நகரமான பெஷாவருக்கு சென்று கொண்டிருந்த அந்த ரயிலை பலுசிஸ்தான் கிளர்ச்சி அமைப்பான பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் (BLA) போலன் மாவட்டத்தில் வைத்து கடத்தியது.
இவர்களில் 20 பேரை BLA கிளர்ச்சியாளர்கள் கொன்றதாகவும், ஒரு ட்ரோனை சுட்டு வீழ்த்தியதாகவும் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் நேற்று செய்தி வெளியிட்டிருந்தது. பயணிகளை பணய கைதிகளாக BLA கிளர்ச்சியாளர்கள் பிடித்து வைத்ததாகவும், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள், பலுசிஸ்தான் மாகாணத்தை சேர்ந்தவர்களை அவர்கள் விடுவித்ததாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது.
அதனை தொடர்ந்து நேற்று மாலை வெளியான தகவலின் படி,இதுவரை 190 பயணிகள் கிளர்ச்சியாளர்களிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளனர் என்றும், 30 BLA கிளர்ச்சியாளர்களை பாகிஸ்தான் ராணுவம் சுட்டு கொன்றுள்ளனர் என்றும் தகவல் வெளியிட்டுள்ளது. இன்னும் 100-க்கும் மேற்பட்ட பணய கைதிகள் BLA கிளர்ச்சியாளர்கள் வசம் இருப்பதாகவும் அந்த கிளர்ச்சியாளர்களிடம் தற்கொலை படையினரும் இருக்கலாம் என AFP செய்தி நிறுவனத்திடம் பாகிஸ்தான் பாதுகாப்பு அதிகாரி தெரிவித்திருந்தார்.
மேலும், பாகிஸ்தான் ராணுவம் தங்களை தாக்க முற்பட்டால் பயணிகளை கொன்று விடுவோம் என BLA கிளர்ச்சியாளர்கள் எச்சரித்திருந்தனர். அதனைத்தொடர்ந்து இப்போது மீண்டும் கடைசியாகவும் எச்சரிக்கை வெளியிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. BLA வெளியிட்ட அறிக்கையில், பலூச் அரசியல் கைதிகள் மற்றும் காணாமல் போனவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்படாவிட்டால், அனைத்து பணயக்கைதிகளையும் கொல்லும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது.
அது மட்டுமின்றி, இந்தச் சம்பவத்தில், பலூச் விடுதலை ராணுவம் (BLA) 100 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாகவும், 20 மணி நேரத்திற்குள் அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றம் செய்யப்படவில்லை என்றால் , அனைத்து பணயக்கைதிகளையும் கொல்லும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது என ஆங்கில ஊடகங்களில் செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளது.
ஏற்கனவே, பலூச் விடுதலை ராணுவம் (BLA) ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயிலை கடத்தியபோது, அவர்கள் பாகிஸ்தான் சிறைகளில் உள்ள தங்களது அமைப்பினரை 48 மணி நேரத்திற்குள் விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரிக்கை வைத்திருந்தனர். அந்த கோரிக்கை இப்போது 20 மணி நேரத்திற்குள் நிறைவேற்றவில்லை என்றால் இந்த நடவடிக்கை எடுக்கப்படும் என BLA எச்சரித்ததாக கூறப்படுகிறது. ஏற்கனவே, அங்கு பதட்டமான சூழல் நிலவி வரும் சூழலில் இது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
அவரு கண்ணுல தெரியுது! 2027 உலகக்கோப்பைக்கு ஸ்கெட்ச் போட்ட ரோஹித்! ரிக்கி பாண்டிங் கணிப்பு!
March 13, 2025
“வெளியே வரல உள்ளயே வச்சு சுட்டுட்டாங்க”.. பாகிஸ்தான் ரயில் கடத்தலில் நடந்த திகில் சம்பவங்கள்!
March 13, 2025