உங்களை கல்யாணம் பண்ண எப்படி மாறனும்? பதில் சொல்லி ரசிகரை அழவைத்த மாளவிகா!
எனக்கு இப்போது கணவன் வேண்டாம் என ரசிகர் கேள்விக்கு மாளவிகா மோகனன் அளித்த பதில் பதிவு வைரலாகி வருகிறது.

சென்னை : சமூக வலைத்தளங்களில் மாளவிகா மோகனன் ஒரு போஸ்ட் ஒன்றை போட்டாலே போதும் லைக்குகளும், கமெண்டுகளும் மலைச்சாரல் போல வரிசையாக வரும். அதைப்போல, தான் அவர் அடிக்கடி ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிப்பதாக அறிவித்தால் பல கேள்விகள் குவிந்துவிடும். அப்படி தான் அவர் நேற்று தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் தன்னிடம் ஏதாவது கேள்வி கேளுங்கள் என பதிவிட்டு இருந்தார்.
உடனடியாக ரசிகர்கள் பலரும் தங்களுக்கு தோன்றிய அனைத்து கேள்விகளையும் கேட்டனர். குறிப்பாக உங்களுக்கு எந்த கிரிக்கெட் வீரர் பிடிக்கும் என ரசிகர் கேட்ட நிலையில், அதற்கு பதில் சொன்ன மாளவிகா எனக்கு விராட் கோலி தான் பிடிக்கும் என பதில் அளித்தார். அந்த பதிவை பார்த்த விராட் கோலி ரசிகர்கள் லைக் செய்து அந்த போஸ்டை ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.
அதனைதொடர்ந்து மற்றொரு ரசிகர் திருமணம் பற்றி கேள்வி கேட்டதற்கு மாளவிகா சொன்ன பதில் தான் மிகப்பெரிய அளவில் வைரலாகி கொண்டு இருக்கிறது. அந்த ரசிகர் ” நான் உங்களை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன். ஆனால் அதைவிட நீங்கள் எப்படி பட்ட கணவனை தேடுகிறீர்கள் என்பதை சொல்லுங்கள்..அதற்கு ஏற்றபடி நான் மாறிக்கொள்கிறேன்” என கேட்டிருந்தார்.
அந்த கேள்விக்கு பதில் அளித்த மாளவிகா மோகனன் ஒரே வரியில் நச் பதில் கொடுக்கும் வகையில் “எனக்கு இப்போது கணவன் தேவையில்லை” என திருமணம் இல்லை என்பதை திட்டவட்டமாக தெரிவித்தார். மாளவிகா சொன்ன பதிலை பார்த்த அந்த ரசிகரும் கண்கலங்கி அழுவது போல எமோஜியை பதிவிட்டார். இந்த பதிவு தான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
