400க்கும் மேற்பட்ட பயணிகளுடன் ரயில் ஹைஜேக்… பாகிஸ்தானில் உச்சக்கட்ட பதற்றம்.!
பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தான் விடுதலை ராணுவம், 400 பயணிகளை ஏற்றிச் சென்ற ஜாஃபர் எக்ஸ்பிரஸைக் கைப்பற்றியுள்ளனர்.

பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தென்மேற்கு பலுசிஸ்தான் மாகாணத்தில் குவெட்டா – பெசாவருக்கு ஜாபர் விரைவு ரயில் 450 பேருடன் சென்றது. அப்போது ரயில் மீது துப்பாக்கியால் சுட்டு அதை நிறுத்தி 120க்கும் மேற்பட்டோரை சிறைபிடித்துள்ளனர். பாகிஸ்தானில் பல ஆண்டுகளாக கிளர்ச்சியை நடத்தி வரும் பிரிவினைவாத பலுசிஸ்தான் விடுதலை ராணுவம், இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுள்ளது.
இந்நிலையில், இச்சம்பவத்திற்கு பொறுப்பேற்றுள்ள பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் (BLA) அமைப்பு, ரயிலை தாங்கள் கடத்தியுள்ளதாகவும், ராணுவம் தாக்கினால் பயணிகளை கொன்று விடுவோம் எனவும் எச்சரித்துள்ளது. பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவிலிருந்து வடக்கு நகரமான பெஷாவருக்கு ரயில் சென்று கொண்டிருந்தபோது போலன் மாவட்டத்தில் இந்தத் தாக்குதல் நடந்ததாக அரசாங்க செய்தித் தொடர்பாளர் ஷாஹித் ரிண்ட் தகவல் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் கடத்தப்பட்ட ரயிலில் பாகிஸ்தான் ராணுவத்தைச் சேர்ந்த 100 வீரர்களும், பாகிஸ்தானின் உளவுத்துறை நிறுவனமான ஐ.எஸ்.ஐ.யின் பல அதிகாரிகளும் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதுமட்டுமின்றி இந்த ரயிலில் நூற்றுக்கணக்கான சாதாரண பயணிகளும் பயணம் செய்தனர்.
மேலும், குவெட்டாவைச் சேர்ந்த ராணுவ அதிகாரிகள் அதில் அமர்ந்திருந்ததாகக் கூறப்படுகிறது. குவெட்டா பாகிஸ்தானின் முக்கிய இராணுவத் தளங்களில் ஒன்றாகும். எனவே, இந்த ரயிலில் பல முக்கியமான நபர்கள் இருப்பார்கள் என்று நம்பப்படுகிறது.
ஒரு தகவலின்படி, பலுசிஸ்தானின் போலனின் தாதர் பகுதியில் பி.எல்.ஏ ரயில் தண்டவாளங்களை வெடிக்கச் செய்து, ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயிலைக் கைப்பற்றி, 120க்கும் மேற்பட்ட பயணிகளை பிணைக் கைதிகளாகப் பிடித்தது. இந்த நடவடிக்கையில் இதுவரை 6 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், உயிரிழப்புகள் மற்றும் பணயக்கைதிகளின் நிலை குறித்து பலூச் அதிகாரிகளோ அல்லது ரயில்வேயோ இன்னும் அதிகார்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : கோடை கனமழை முதல்…தர்மேந்திர பிரதான் விவகாரம் வரை!
March 12, 2025