“கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ‘Blackmail’ பண்றாரு” – முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

மும்மொழி கொள்கை என்ற பெயரில் இந்தி, சமஸ்கிருதத்தை ஏற்றுக்கொண்டால்தான் ரூ.2000 கோடி நிதி தருவோம் என்று திமிராக பேசுகிறார் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்.

Dharmendra Pradhan - M.K. Stalin

சென்னை : செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ரூ.497.06 கோடி மதிப்பீட்டிலான 5 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, ரூ.280.38 கோடி செலவில் 47 முடிவுற்ற பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். மேலும் நகர்ப்புறப் பகுதிகளில் பட்டா வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்து, ரூ.508.03 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை 50,606 பயனாளிகளுக்கு வழங்கினார்.

அடிக்கல் நாட்டியதும் விழாவில் ‘தேசிய கல்வி கொள்கைக் குறித்தும் தர்மேந்திர பிரதான் குறித்தும்’ முதல்வர் ஸ்டாலின் பேசியிருக்கிறார். இது குறித்து அவர் பேசுகையில், “கல்வியில் இருந்து மாணவர்களை நீக்கம் செய்வதற்கான அத்தனைத் திட்டங்களும் தேசிய கல்வி கொள்கையில் இருக்கிறது.

மும்மொழி கொள்கை என்ற பெயரில் இந்தி, சமஸ்கிருதத்தை ஏற்றுக்கொண்டால்தான் ரூ.2000 கோடி நிதி தருவோம் என்று திமிராக பேசுவதோடு, மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ‘Blackmail’ செய்கிறார் . தேசிய கல்வி கொள்கை என்ற பெயரில் தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சியை அழிக்க வேண்டும் என்பதே அவர்கள் திட்டம்.

கல்வியில் இருந்து மாணவர்களை நீக்கம் செய்யும் அனைத்து திட்டங்களும் தேசிய கல்வி கொள்கையில் இருக்கிறது. தேசிய கல்விக் கொள்கை என்ற பெயரில் ஒன்றிய அரசு புகுத்த நினைக்கும் நாக்பூரின் நாசகார கொள்கையை ரூ.10,000 கோடி கொடுத்தாலும் நாங்கள் ஏற்க மாட்டோம்” என்றார்.

இறுதியில் எம்.பி.க்களை நாகரிகமற்றவர்கள் என பேசிய தர்மேந்திர பிரதானை 30 நிமிடத்தில் திரும்பப் பெற வைத்த போர்க்குரல் கொடுத்த எம்.பி.க்களுக்கு பாராட்டுகளையும்” தெரிவித்து கொண்டார்.

இதையடுத்து  தனது முதல்வர் ஸ்டாலின்எக்ஸ் பக்கத்தில், “2024ல் பாஜக ஒன்றிய அமைச்சர் ஷோபா, தமிழர்கள் வெடிகுண்டு வைக்கும் தீவிரவாதிகள் என்றார். இப்போது ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான், தமிழர்கள் நாகரிகம் இல்லாதவர்கள் என்கிறார். தமிழர்கள் மீது பாஜகவினருக்கு இருக்கும் வன்மம் வெளிப்பட்டுவிட்டது” பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்