பாலியல் புகார் ஆசிரியர்களுக்கு ‘ஆப்பு’! வேலையை காலி செய்த பள்ளிக்கல்வித்துறை!
பாலியல் புகாரில் சிக்கிய 23 அரசு பள்ளி ஆசிரியர்களை வேலையை விட்டு நீக்கி பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

சென்னை : பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தாலும், அந்த குற்றங்கள் குறைந்தபாடில்லை. பெண்கள் அதிலும் குறிப்பாக குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்வது வேதனை மிகுந்த தொடர்கதையாகி வருகிறது.
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் புகார்களில் ஈடுபடுவோர் சில சமயம் அவர்கள் பயிலும் பள்ளி ஆசிரியர்களாக இருப்பது அதிர்ச்சிக்குரிய விஷயமாக உள்ளது. இதனை தடுக்கும் பொருட்டும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றத்தில் ஈடுபடும் ஆசிரியர்களை கடுமையாக தண்டிக்கும் பொருட்டும் பள்ளிக்கல்வித்துறை தற்போது ஒரு அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
அதாவது பள்ளி குழந்தைகளுக்கு எதிராக பாலியல் குற்றத்தில் ஈடுபட்டு போக்ஸோ வழக்கு பதியப்பட்டு குற்றம் நிரூபணமாகிய அரசு பள்ளி ஆசிரியர்கள் 23 பேரை வேலையை விட்டு நீக்கி பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதுவரை நிலுவையில் உள்ள குற்றம் உறுதிப்படுத்தப்பட்ட போக்ஸோ வழக்குகள் மொத்தம் 46 என தகவல் வெளியாகி இருந்த சமயத்தில் தற்போது 23 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : கோடை கனமழை முதல்…தர்மேந்திர பிரதான் விவகாரம் வரை!
March 12, 2025