ரச்சின் ரவீந்திரா தொடர் நாயகனா? ஐசிசி முடிவால் கடுப்பான அஸ்வின்!
சாம்பியன்ஸ் டிராபியில் தொடர் நாயகன் விருது வருண் சக்கரவர்த்திக்கு கொடுத்திருக்கவேண்டும் என இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின் தெரிவித்துள்ளார்.

துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்து அணியை வீழ்த்தி கோப்பையை வென்றுவிட்டது. இதனை தொடர்ந்து இந்த தொடரில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு ஐசிசி சார்பாக விருது வழங்கப்பட்டது. குறிப்பாக, இந்த தொடரில் 263 ரன்கள் குவித்து அதிக ரன்கள் அடித்தவர் என்ற பெயரை பெற்றுள்ள நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திரா தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது.
இதனையடுத்து, ஐசிசி அவருக்கு இந்த விருதை கொடுத்திருக்க கூடாது வருண் சக்கரவர்த்திக்கு தான் அந்த விருதை கொடுத்திருக்கவேண்டும் என இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின் சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பேசியிருக்கிறார். இது குறித்து பேசிய அவர் ” என்ன சொன்னாலும், என்ன செய்தாலும், போட்டியின் நாயகன், என் பார்வையில், வருண் சக்கரவர்த்திதான். ஏனென்றால், அவர் பந்துவீச்சில் அந்த அளவுக்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார்.
இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அவர் முழுவதுமாக விளையாடவில்லை என்றாலும் கூட சில போட்டிகளில் விளையாடி பெரிய அளவில் தாக்கத்தை உண்டு செய்துள்ளார். வருண் சக்கரவர்த்தி இல்லையென்றால், இந்த ஆட்டம் மிகவும் வித்தியாசமாக இருந்திருக்கும் என்று நான் சொல்வேன். அவர் இறுதிப்போட்டியில் விளையாடிய விதம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. கூக்லி பந்துகள் போட்டி விக்கெட்கள் எடுத்ததை பார்த்தபோது அவரிடம் எதோ எனக்கு தெரிந்தது.
இப்படி சிறப்பாக இந்த தொடரில் விளையாடிய அவருக்கு தான் தொடர் நாயகன் விருதை ஐசிசி கொடுத்திருக்கவேண்டும்” எனவும் அஸ்வின் தெரிவித்தார். மேலும், ஐசிசி தேர்வு செய்த அந்த 11 வீரர்களில் 11-வது இடத்தில் வருண் சக்கரவர்த்தி பெயர் இடம்பெற்றிருந்தது. இருப்பினும் அவருக்கு விருது வழங்கப்படவில்லை என்பது அஸ்வின் மட்டுமின்றி ரசிகர்களுக்கும் ஒரு ஏமாற்றமான செய்தியாக தான் அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : கோடை கனமழை முதல்…தர்மேந்திர பிரதான் விவகாரம் வரை!
March 12, 2025