ஆஸ்திரேலியாவுக்கு எதிராக படுதோல்வி..கோப்பையை வென்றபிறகு பேசிய விராட் கோலி!
ஆஸ்ரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரில் தோல்வி அடைந்தது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக விராட் கோலி தெரிவித்துள்ளார்.

துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்திய கிரிக்கெட் அணி கோப்பையை வென்ற நிலையில், பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் இந்தியாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டு இருக்கிறார்கள்.
இந்நிலையில், போட்டி முடிந்த பிறகு பேசிய விராட் கோலி ஆஸ்ரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரில் தோல்வி அடைந்தது பற்றியும், அணியில் இளம் வீரர்களுடன் விளையாடுவது பற்றியும் சில விஷயங்களை பேசினார். இது குறித்து பேசிய விராட் கோலி ” ஆஸ்ரேலியாவுக்கு எதிரான போட்டியில் நாங்கள் தோல்வி அடைந்தபிறகு நாங்கள் மீண்டும் பழையபடி எழுந்துவர விரும்பினோம். அந்த தோல்வி எங்களை அதிர்ச்சிக்கு உள்ளாகியது.
அந்த தோல்வியிலிருந்து எப்படி மீண்டு வந்தால் நம்மால் சரியாக பதிலடி கொடுக்கமுடியும் என திட்டமிட்டு எங்களுடைய அணி சிறப்பாக பயிற்சி செய்து மீண்டும் எழுந்துள்ளோம் என்று நினைக்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது” என விராட் கோலி பேசினார். அதனைத்தொடர்ந்து பேசிய விராட் கோலி ” இப்போது நான் இளம் வீரர்களுடன் எங்களுடைய அணியில் விளையாடியதை நினைக்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
அவர்கள் நம்மளுடைய அணியை சிறப்பாக கொண்டு செல்கிறார்கள். அவர்களுடன் நானும் பயணம் செய்து என்னுடைய அனுபவத்தை நான் கற்றுக்கொடுக்க விரும்புகிறேன். இப்போது சிறப்பாக விளையாடினாள் தான் அடுத்ததாக அவர்கள் கிரிக்கெட் விட்டு போகும்போது அவர்களுடைய பெயரும் பெரிய அளவில் பேசப்படும். கில், ஷ்ரேயாஸ், ராகுல் எடுத்துகொண்டிறீர்கள் என்றால் அவர்களுடைய தாக்கம் பெரிய அளவில் இருக்கிறது.
இன்னுமே வருங்காலங்களில் சிறப்பாக அவர்கள் விளையாடுவார்கள் என நான் உறுதியாகவே சொல்வேன். எதிர்காலங்களில் இந்திய அணியை எப்படி வழிநடத்தப்போகிறார்கள் என முன்னதாக எனக்கு தோணும். ஆனால், இப்போது இளம் வீரர்களின் விளையாட்டை பார்க்கும்போது இந்திய அணி நல்ல கையில் தான் இருக்கிறது என எனக்கு தோணுகிறது” எனவும் விராட் கோலி பேசினார்.