IND vs NZ : “நியூசிலாந்தை பார்த்தாலே பயமா இருக்கு”…ரசிகர்கள் தலையில் குண்டைப்போட்ட அஸ்வின்!

இந்திய அணியை விமர்சனம் செய்பவர்களை பார்க்கும்போது சிரிப்பு தான் வருகிறது என அஸ்வின் தெரிவித்துள்ளார்.

ravichandran ashwin

துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டி நாளை துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில்  நியூசிலாந்து அணியை எதிர்கொள்ள இந்திய அணி தற்போது தயாராகி வருகிறது. ஏற்கனவே, இந்த இரண்டு அணிகளும் 2000-ஆம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டியில் மோதியிருந்த நிலையில், அதில்  நியூசிலாந்து அணி தான் வெற்றிபெற்றது.

அந்த வெற்றிக்கு பதிலடி கொடுக்கவேண்டும் என்ற நோக்கத்தோடு இந்திய அணி களமிறங்கவுள்ளது. இந்த சூழலில் போட்டி குறித்து அந்த வீரர் திருப்பு முனையாக இருப்பார்..இந்த வீரர் திருப்பு முனையாக இருப்பார் என முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பேசி வருகிறார்கள்.

ஏற்கனவே, இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ” போட்டியில் இந்திய அணி வெற்றிபெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. ஆனால், அதே சமயம் நியூசிலாந்து அணி பெரிய அளவில் சவாலை கொடுக்கலாம் என பேசியிருந்தார். அவரை தொடர்ந்து இப்போது முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின் நியூசிலாந்தை பார்த்தாலே பயமா இருக்கு என பேசியுள்ளார்.

தனியார் ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் பேசும்போது ” இறுதிப்போட்டியை நினைத்தால் எனக்கு கொஞ்சம் பயமாக தான் இருக்கிறது. இந்திய அணி வெற்றிபெறுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருந்தாலும் கூட நியூசிலாந்து அணியும் சிறந்த பார்மில் இருப்பதால் எனக்கு கொஞ்சம் பயமாக இருக்கிறது. பழையபடி மீண்டும் இந்திய ரசிகர்களின் ஆசையை கனவாக்கிவிடும் என பயமாக இருக்கிறது” என அஸ்வின் பேசினார்.

ஏற்கனவே போட்டியில் என்ன நடக்க போகிறது என ரசிகர்கள் பயத்தில் இருக்கும் நிலையில், அஸ்வின் இப்படி பேசியுள்ளது மேலும் பயத்தை ஏற்படுத்தியுள்ளதாக நகைச்சுவையாக நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள். அதனைத்தொடர்ந்து அஸ்வின் இந்தியா மீது வைக்கப்பட்ட விமர்சனங்கள் குறித்தும் பதில் அளிக்கும் வகையில் பேசினார்.

இந்தியா தொடர்ச்சியாக ஒரே மைதானத்தில் விளையாடுவதன் காரணமாக தான் வெற்றிபெறுகிறது என குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர். அதற்கு பதில் அளிக்கும் விதமாக பேசிய அஸ்வின் ” இப்படியான விமர்சனங்களை பார்த்து எனக்கு சிரிப்பு தான் வருகிறது. இப்படியெல்லாம் விமர்சனங்கள் வேண்டுமென்றே வைக்கப்படுவதாக நான் நினைக்கிறேன்.

இந்த விமர்சனங்களை பார்க்கும்போது எனக்கு அதிகமாக கோபம் வந்தது. ஆனால் எனக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் இது பற்றி இப்போது பேசமுடியவில்லை. இப்போது நான் சொல்லிக்கொள்வது ஒன்று தான் எங்களுடைய அணியை விமர்சனம் செய்யாதீர்கள்” எனவும் சற்று காட்டத்துடன் அஸ்வின் பேசியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்