தற்கொலை முயற்சி அல்ல.. மருத்துவமனையில் பாடகி கல்பனா.! மகள் சொன்ன அதிர்ச்சி தகவல்!
பிரபல பாடகி கல்பனா தற்கொலை எனக் கூறப்பட்ட சம்பவம் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹைதராபாத் : தமிழ், தெலுங்கு உட்பட பல்வேறு மொழி திரைப்படங்களில் பின்னணிப் பாடகியாக வலம் வந்த கல்பனா அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகளை விழுங்கி ஹைதராபாத்தில் உள்ள தன்னுடைய வீட்டில் தற்கொலை முயற்சி செய்துள்ளார் என்று செய்திகள் வெளியானது.
தற்போது, கல்பனாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. தற்கொலைக்கு முயன்ற பாடகி கல்பனாவின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், அவர் இப்போது சுயநினைவை பெற்றுள்ளார் என தகவல் வெளிவந்துள்ளது. அவரது வீட்டின் கதவுகள் இரண்டு நாட்களாக திறக்கப்படாததால், அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
உடனே போலீசார் அங்கு வந்து கதவுகளை உடைத்துப் பார்த்தபோது மயங்கி கிடைந்தது தெரிய வந்துள்ளது. பின்னர் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இது தொடர்பாக, காவல்துறையினர் எவ்வாறு பாடகி கல்பனாவை மீட்டனர் என்கிற காணொளி சமுக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
Kalpana, the well-known #SingerKalpana , tried to end her life by taking a lot of sleeping pills. Kalpana spent two days at home by herself, without her husband. Police are investigating Kalpana’s phones and devices because they suspect her spouse. #Kalpanasucide pic.twitter.com/2YrOouVE9y
— Amaravati Flash (@sateeshservices) March 5, 2025
தூக்க மாத்திரைகளை விழுங்கி தற்கொலைக்கு முயன்றதாக செய்திகள் பரவிய நிலையில், அவர் எனது அம்மா தற்கொலை முயற்சி செய்யவில்லை என்று கல்பனா மகள் விளக்கம் அளித்துள்ளார்.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து அவர் உடல்நலக் குறைவு காரணமாகவா அல்லது வேறு காரணமா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ‘என் ராசாவின் மனசிலே’ படத்தின் ‘போடா போடா புண்ணாக்கு’ பாடலை பாடி பிரபலமடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கல்பனாவின் புது வீடியோ
தூக்க மாத்திரைகளை விழுங்கி தற்கொலைக்கு முயன்ற பிரபல பாடகி கல்பனா, ஹாஸ்பிடலில் இருக்கும் புது வீடியோ வெளியாகியுள்ளது. வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வரும் அவரின் உடல்நிலை சீராக இருக்கிறது. ஹாஸ்பிடலில் படுத்தப் படுக்கையாக இருக்கும் அவர், தனது வாயைத் துடைக்கும் காட்சி வீடியோவில் இடம்பெற்றுள்ளது.
#Exclusive visuals of #Singerkalpana Health#Tollywood Singer Kalpana Health situation in Hospital#Singerkalpana#Film#Tollywood pic.twitter.com/PF3TrPQWn6
— SHRA.1 JOURNALIST✍ (@shravanreporter) March 5, 2025
கல்பனா மகள் விளக்கம்:
இது தொடர்பாக பேசிய அவர், “என் அம்மாவுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. நன்றாக இருக்கிறார். அவர் ஒரு பாடகி. மேலும் தனது பிஎச்டி, எல்எல்பி படிப்பையும் படித்து வருகிறார். இதனால் அவர் சரியாக தூக்கம் இல்லாமல் தவித்தார். தூக்கமின்மையை குணப்படுத்த, மருத்துவர் பரிந்துரைத்த மாத்திரைகளை எடுத்துக் கொண்டார்.
எனது அம்மா கல்பனா தற்கொலை முயற்சி செய்யவில்லை, மன அழுத்தம் காரணமாக மருத்துவர்கள் பரிந்துரைத்த தூக்க மாத்திரை மருந்தின் வீரியம் அதிகமாக இருந்தது. தயவுசெய்து எந்த தவறான தகவலையும் பரப்பவோ அல்லது திரிக்கவோ வேண்டாம்” என கூறியுள்ளார்.
మా అమ్మ ఆత్మహత్య కు ప్రయత్నించలేదు
మందులు ఓవర్ డోస్ అయ్యాయి అంతే.
దయచేసి తప్పుడు ప్రచారం చెయ్యొద్దు
– కల్పన ఆత్మహత్యా యత్నం పై కుమార్తె ఇచ్చిన వివరణ#SingerKalpana pic.twitter.com/6okNIG1A2E
— Telugu360 (@Telugu360) March 5, 2025