SA vs NZ : தென்னாப்பிரிக்காவை கதறவிட்ட வில்லியம்சன் – ரச்சின்! நியூசிலாந்து வைத்த இமாலய இலக்கு.!
சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் ஆஸ்திரேலியா அடித்த அதிகபட்ச ரன்களான 356 ரன்கள் சாதனையை முறியடித்து நியூசிலாந்து வரலாறு படைத்துள்ளது.

லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், நேற்று முதல் அரையிறுதி போட்டியில் ஆஸ்ரேலியா அணியை வீழ்த்தி இந்தியா அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. அதனைத்தொடர்ந்து இன்று அரையிறுதி சுற்றின் 2-வது போட்டி லாகூரில் உள்ள கடாஃபி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியில், தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி, அதிரடியாக விளையாடி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 362 ரன்கள் எடுத்து, தென்னாப்பிரிக்கா அணிக்கு 363 என்கிற இமாலய இலக்கை வைத்துள்ளது.
நியூசிலாந்து அணி சார்பாக ரச்சின் ரவீந்திரா 108 ரன்களும்., கேன் வில்லியம்சன் 102 ரன்களும் குவித்தனர். டேரில் மிட்செல் 37 பந்துகளில் 49 ரன்களும், க்ளென் பிலிப்ஸ் 27 பந்துகளில் 49 ரன்களும் எடுத்தனர். வில் யங் 21 ரன்களும், மைக்கேல் பிரேஸ்வெல் 16 ரன்களும் எடுத்தனர்.
டாம் லாதம் 4 ரன்கள் எடுத்த பிறகு அவுட் ஆனார். மிட்செல் சாண்ட்னர் 2 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். தென்னாப்பிரிக்கா தரப்பில் லுங்கி நிகிடி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். காகிசோ ரபாடா 2 விக்கெட்டுகளையும், வியான் முல்டர் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
கேன் வில்லியம்சன் 94 பந்துகளில் 102 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரை வியான் முல்டர் வெளியேற்றினார். கேன் வில்லியம்சன் 91 பந்துகளில் சதம் அடித்துள்ளார். அவர் 10 பவுண்டரிகள் மற்றும் இரண்டு சிக்ஸர்களை அடித்துள்ளார். முன்னதாக, ரச்சின் ரவீந்திர 108 ரன்கள் எடுத்த இன்னிங்ஸை விளையாடினார். ரச்சின் ரவீந்திர வெறும் 93 பந்துகளில் சதம் அடித்துள்ளார். இருப்பினும், ரச்சின் ரவீந்திர 101 பந்துகளில் 108 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். அவரை காகிசோ ரபாடா பெவிலியனுக்கு அனுப்பினார்.
பேட்டிங்கை பொறுத்தவரையில் அதிகபட்சமாக ரச்சின் ரவீந்திரன் 108, கேன் வில்லியம்சன் 102 ரன்கள் எடுத்தனர். அதைப்போல தென்னாப்பிரிக்கா சார்பாக பந்துவீச்சை பொறுத்தவரையில், லுங்கி நிகிடி அதிகபட்சமாக 3 விக்கெட்களையும், காகிசோ ரபாடா 2 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளார். சொல்லப்போனால், நியூசிலாந்து அணி மிகவும் வலுவான நிலையில் உள்ளது. இப்பொது, நியூசிலாந்து அணி வைத்துள்ள 362 என்ற இமாலய இலக்கை துரத்தவுள்ளது.