பயணிகள் கவனத்திற்கு…தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களின் சேவையில் மாற்றம் – தெற்கு ரயில்வே அறிவிப்பு.!

பராமரிப்பு பணிகளுக்காக நாளை (மார்ச் 6) முதல் மார்ச் 9ம் தேதி வரை தென் மாவட்டங்களுக்கு செல்லும் பெரும்பாலான ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

Southern Railway

சென்னை : சென்னை கடற்கரை – எழும்பூர் இடையே புதிய வழித்தடம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதால், இதற்கு இடையிலான 4-வது வழித்தடப் பணிகளுடன் தொடர்புடைய இன்டர்லாக் அல்லாத பணிகளை எளிதாக்குவதற்காக, ரயில் சேவைகளின் முறையில் பின்வரும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. பயணிகள் இதைக் கவனத்தில் கொண்டு உங்கள் பயணத்தைத் திட்டமிடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே தனது அறிக்கையில்,  சென்னை கடற்கரை – எழும்பூர் இடையே ரயில்வே டிராக் பராமரிப்பு பணிகளுக்காக நாளை (மார்ச் 6) முதல் மார்ச் 9ம் தேதி வரை தென் மாவட்டங்களுக்கு செல்லும் பெரும்பாலான ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

அதன்படி, காரைக்குடி – எழும்பூர் இடையேயான பல்லவன் அதிவேக விரைவு ரயில் மார்ச் 06, 07ல் தாம்பரத்தில் நிறுத்தப்படும். மன்னார்குடி சென்னை எழும்பூர் இடையேயான விரைவு ரயில் மார்ச் 8ல் தாம்பரத்தில் நிறுத்தப்படும்.

நெல்லை – சென்னை எழும்பூர் இடையேயான நெல்லை எக்ஸ்பிரஸ் மார்ச் 8ல் செங்கல்பட்டில் நிறுத்தப்படும். தூத்துக்குடி – சென்னை எழும்பூர் இடையேயான முத்துநகர் எக்ஸ்பிரஸ் மார்ச் 8ல் மாம்பலத்தில் நிறுத்தப்படும்.

மண்டபம் சென்னை எழும்பூர் இடையேயான விரைவு ரயில் மார்ச் 8ல் தாம்பரத்தில் நிறுத்தப்படும். புதுச்சேரி – சென்னை எழும்பூர் இடையேயான பயணிகள் ரயில் மார்ச் 8ல் தாம்பரத்தில் நிறுத்தப்படும்.

சென்னை எழும்பூர் மதுரை இடையேயான வைகை அதிவேக விரைவு ரயில் மார்ச் 06, 07ல் தாம்பரத்தில் இருந்து புறப்படும். சென்னை எழும்பூர் புதுச்சேரி இடையேயான பயணிகள் ரயில் மார்ச் 9ல் தாம்பரத்தில் இருந்து புறப்படும்

சென்னை எழும்பூர் ராமேஸ்வரம் இடையேயான சேது அதிவேக விரைவு ரயில் மார்ச் 9ல் தாம்பரத்தில் இருந்து புறப்படும். சென்னை எழும்பூர் – நெல்லை இடையேயான வந்தே பாரத் ரயில் மார்ச் 6, 7ல் 15 நிமிடம் தாமதமாக பிற்பகல் 3 மணிக்கு எழும்பூரில் இருந்து புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்