Live : சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதி முதல்.., மும்மொழி கொள்கை விவகாரம் வரையில்…
சாம்பியன்ஸ் டிராபி முதல் அரையிறுதி போட்டி முதல், பல்வேறு அரசியல் நிகழ்வுகள் குறித்தும் இந்த செய்தி குறிப்பில் காணலாம்.

சென்னை : இன்று சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதி போட்டி துபாயில் நடைபெறுகிறது. இதில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலியா அணியும் மோதுகின்றன. கடந்த 2011 உலக கோப்பை காலிறுதி போட்டிக்கு பிறகு இந்திய அணி ஆஸ்திரேலியா அணியை ஐசிசி நாக் அவுட் சுற்றில் வெற்றிபெற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மும்மொழி கொள்கை விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், சமீபத்தில் ஒரு ஆங்கில ஊடகத்திற்கு பேட்டியளித்து இருந்தார். அதில் மும்மொழி கொள்கையை ஏற்ற எந்த மாநிலம் தமிழ்நாட்டின் கல்வி அறிவை விட அதிகமாக இருக்கிறது என கடும் கேள்விகளை எழுப்பி இருந்தார். அதே போல மூன்று மொழிகளில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த தமிழிசை சவுந்தராஜனுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமக்கு மூன்றாவது மொழி தெரியாது. உங்களுக்கு அங்கு தேவைபட்டுள்ளது அதனால் பதிவிட்டு உள்ளீர்கள் என பதில் அளித்து இருந்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
ஆனந்த் அம்பானியின் வந்தாரா: வனவிலங்கு மறுவாழ்வு மையத்தை திறந்து வைத்து சிங்கக்குட்டிக்கு பாலூட்டிய மோடி.!
March 4, 2025
“தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும்” வானிலை கொடுத்த சூடான அப்டேட்.!
March 4, 2025