INDvsNZ : புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடிக்கப்போவது யார்? பந்துவீச்சை தேர்வு செய்த நியூசிலாந்து!

இந்தியா அணியில் கேப்டன் ரோஹித் சர்மா நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் விளையாடமாட்டார் என தகவல்கள் வந்த நிலையில் அவர் விளையாடுகிறார்.

INDvsNZ

துபாய் :  இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இன்று (மார்ச் 2, 2025) துபாயில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் குரூப் சுற்றின் கடைசி போட்டியில் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற அணி முதலில் தேர்வு செய்துள்ளது.

வீரர்கள் விவரம்

இந்தியா : ரோஹித் சர்மா (c), சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், அக்சர் படேல், கே.எல். ராகுல் (wk), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி

நியூசிலாந்து : வில் யங், ரச்சின் ரவீந்திரா, கேன் வில்லியம்சன், டேரில் மிட்செல், டாம் லாதம்(w), க்ளென் பிலிப்ஸ், மைக்கேல் பிரேஸ்வெல், மிட்செல் சாண்ட்னர்(c), மேட் ஹென்றி, கைல் ஜேமிசன், வில்லியம் ஓரூர்க்

மேலும், இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தைப் பிடிக்கும் என்பதால் போட்டியில் விறு விறுப்புக்கு பஞ்சமே இருக்காது என்று சொல்லலாம். இரண்டு அணிகளும் ஏற்கனவே அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளதால், இந்தப் போட்டி அவர்களின் அரையிறுதிப் போட்டிக்கான ஒரு பயிற்சி போட்டி என்று கூட சொல்லலாம். இருப்பினும் புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடிக்க இரண்டு அணியும் முயற்சி செய்யும்.

மேலும் விராட் கோலிக்கு இந்த போட்டி 300-வது போட்டி என்பதால் அவர் எத்தனை ரன்கள் எடுக்கப்போகிறார் என்கிற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. ஏனென்றால், ஏற்கனவே தன்னுடைய 200-வது ஒரு நாள் போட்டியில்  99 பந்துகளில் 131 ரன்கள் அடித்தார். எனவே அதைப்போலவே இந்த போட்டியிலும் விளையாடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்