சீமான் நான் பாலியல் தொழிலாளியா? கண்ணீருடன் வீடியோ வெளியிட்ட நடிகை!
என்னுடைய கண்ணீர் சும்மா விடாது என சீமானுக்கு சாபம் விடும் வகையில் கண்ணீருடன் நடிகை வீடியோ வெளியீட்டு பேசியிருக்கிறார்.

சென்னை : நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறிவிட்டு ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகார் இப்போது பெரிய அளவில் பேசுபொருளாக வெடித்துள்ளது. பல ஆண்டுகளாக தாமதமான நிலையில் இருந்து, சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றம் விசாரணையை தொடர உத்தரவிட்டது.
விசாரணையை தொடர்ந்து நேரில் ஆஜராக சீமானுக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்த நிலையில், அவர் ஆஜராகவில்லை என்பதால் அவருடைய வீட்டில் அந்த சம்மன் ஒட்டப்பட்டு அதை ஒருவர் கிழித்து இந்த விவகாரம் பெரிதாக வெடித்தது. பிறகு சீமான் பிப்ரவரி 28-ஆம் தேதி ஆஜரானார். அவரிடம் விசாரணையும் நடத்தப்பட்டது. இதனையடுத்து தற்போது, இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டில் உள்ளது, வரும் மார்ச் 7, 2025 அன்று விசாரணைக்கு வருகிறது.
இந்த சூழலில், இருவரும் மாற்றி மாற்றி பேசி வருகிறார்கள். இன்று காலை சீமான் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது ” சும்மா பாலியல் குற்றவாளி குற்றவாளி என்று என்னை சொல்லாதீர்கள்..என்னை பாலியல் குற்றவாளி என நீங்கள் எப்படி கூறுவீர்கள்? நீங்கள் என்ன நீதிபதியா? விசாரணை நடந்து கொண்டிருக்கும் போது என்னை எப்படி குற்றவாளி என கூறுகிறீர்கள்? எனவும் அந்த நடிகை தான் பாலியல் தொழிலாளி எனவும் அதற்கு தன்னிடம் ஆதாரம் இருக்கிறது எனவும் பேசியிருந்தார்.
இதனையடுத்து, அந்த நடிகை கண்ணீருடன் வீடியோ வெளியிட்டு பேசியிருக்கிறார். இது குறித்து பேசிய அவர் ” நான் என்ன பாலியல் தொழிலாளியா சீமான்? என்னை பாலியல் தொழிலாளி என்று சொல்லியிருக்கிறாய்..நான் பாலியல் தொழிலாளியாக இருந்தால் எதற்காக பெங்களூரில் என்னுடைய அக்காவுடன் கஷ்டபடப்போகிறேன்? இந்த நாள் வரை நீ தப்பித்து இருக்கலாம் ஆனால் இனிமேல் நீ தப்பிக்கவே முடியாது. என்னுடைய கண்ணீரை உன்னை என்ன செய்ய போகிறது என்பதை மட்டும் நீ பார்…என்னுடைய கண்ணீர் உன்னை சும்மா விடாது” எனவும் மிகவும் கண்ணீருடன் வேதனையாக பேசியுள்ளார்.