என்னை பாலியல் குற்றவாளி சொல்ல நீ யாரு? கனிமொழிக்கு பதிலடி கொடுத்த சீமான்!
பெண்களை அவதூறாகப் பேசுவதை கேட்டுக்கொண்டு, சகித்துக் கொண்டு சீமான் கட்சியில் எப்படி இருக்கிறீர்கள்? என கனிமொழி பேசியதற்கு சீமான் பதிலடி கொடுத்துள்ளார்.

சென்னை : நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறிவிட்டு ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகார் இப்போது பெரிய அளவில் பேசுபொருளாக வெடித்துள்ளது. 2023-ஆம் ஆண்டு அவர் புகார் கொடுத்த நிலையில், இந்த வழக்கு பல ஆண்டுகளாக தாமதமான நிலையில் இருந்து, சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றம் விசாரணையை தொடர உத்தரவிட்டது.
விசாரணையை தொடர்ந்து நேரில் ஆஜராக சீமானுக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்த நிலையில், அவர் ஆஜராகவில்லை என்பதால் அவருடைய வீட்டில் அந்த சம்மன் ஒட்டப்பட்டு அதை ஒருவர் கிழித்து இந்த விவகாரம் பெரிதாக வெடித்தது. பிறகு சீமான் பிப்ரவரி 28-ஆம் தேதி ஆஜரானார். அவரிடம் விசாரணையும் நடத்தப்பட்டது. இதனையடுத்து தற்போது, இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டில் உள்ளது, வரும் மார்ச் 7, 2025 அன்று விசாரணைக்கு வருகிறது.
இந்த சூழலில், தொடர்ச்சியாக சீமானும், நடிகை விஜயலட்சுமியும் இந்த விவகாரம் குறித்து பேசி வருகிறார்கள். அந்த வகையில்ம் இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த சீமான் நடிகை அளித்த பாலியல் புகார் பற்றி பேசினார். இது குறித்து பேசிய அவர் ” சும்மா பாலியல் குற்றவாளி குற்றவாளி என்று என்னை சொல்லாதீர்கள்..என்னை பாலியல் குற்றவாளி என நீங்கள் எப்படி கூறுவீர்கள்? நீங்கள் என்ன நீதிபதியா? விசாரணை நடந்து கொண்டிருக்கும் போது என்னை எப்படி குற்றவாளி என கூறுகிறீர்கள்?
நடிகை விஜயலட்சுமி தொடர்பான வழக்கு, உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக சீமான் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு வரும் திங்கள்கிழமை விசாரணைக்கு வருகிறது. இது தொடர்பான வழக்கு நடந்து கொண்டிருக்கிறது அதுக்குள்ள நீ ஒரு பாலியல் குற்றவாளி என்று என்னை எப்படி சொல்வீர்கள் நீ யார் அப்படி சொல்ல..? என சீரியவாறு பேசினார்.
அதன்பிறகு பேசிய சீமான் ” கேரளாவில் சமீபத்தில் வந்த தீர்ப்பு என்ன? ஒரு பெண் அப்படியே சொல்வதால் அது உண்மையாக இருக்கிறது என்று எப்படி நம்புறீங்க நீதிபதி அங்கு கேட்டிருக்காரா இல்லையா அங்கு இருப்பவரும் நீதிபதிதானே?
சொல்லலாம் ஆயிரம் பேர் ஆயிரம் விதமாக சொல்லலாம் என்னை பழி சொல்பவர்களை நான் பழி சொல்லவா? விசாரணை என்று நடந்து கொண்டிருக்கும்போது எப்படி என் மீது குற்றச்சாட்டு வைக்க முடியும் விசாரணை முடியும் போது தான் உண்மையா இல்லையா என்று தெரியும் அதுக்குள் எதற்காக குற்றச்சாட்டை வைக்கிறீர்கள் அதனுடைய நோக்கம் என்ன?
தகுதியை பற்றி நீங்கள் எதற்கு பேசுகிறீர்கள் முதலில் நீங்கள் தலைமை பண்புடன் பேசுங்கள் நடந்துக்கோங்க.. இந்த நாட்டில் இவ்வளவு பிரச்சனை நடந்து கொண்டிருக்கிறது அதைப்பற்றி வாயை திறக்காமல் என்னைப் பற்றி மட்டும் எதற்காக பேசுகிறீர்கள்? அம்மையார் கனிமொழி அண்ணா பல்கலைக்கழக விவகாரம்.. பொள்ளாச்சி சம்பவம் குறித்து எதுவுமே பேசவில்லை மன நலம் பாதிக்கப்பட்ட பெண்ணை 10 பேர் சேர்ந்து வன்கொடுமை செய்தார்கள் அது குறித்து கனிமொழி கூறிய கருத்து என்ன? தினம்தோறும் பள்ளிக்கூடத்திற்கு போகும் பிள்ளைகளை ஆசிரியர் துன்புறுத்துவது உங்களுடைய கருத்து என்ன?
இந்த மாதிரி சம்பவங்கள் நடக்கும்போது வாயில் என்ன வைத்திருந்தீங்க? ஏனென்றால் அங்கு யாரும் இல்லை இங்கே முன்னாடி நிற்கிறது சீமான் அதனால் நீங்கள் பேச வேண்டிய சூழ்நிலை வருகிறது. என்னை பார்த்து நடுங்குகிறீர்கள் என்னை எதிர்கொள்ள முடியாமல் நடுகிறீர்கள்” எனவும் சீமான் ஆவேசத்துடன் பேசினார். அதனைத்தொடர்ந்து வளங்களை அழிப்பதே வளர்ச்சி என்பது உங்கள் கொள்கையா? எது வளர்ச்சி என்று கேட்டால் உங்களால் பதில் சொல்ல முடியவில்லை எனவும் சீமான் பேசினார்.