“சீமான்., அசிங்கமா பேசுற வேலை வச்சிக்காத…” நடிகை வெளியிட்ட பரபரப்பு வீடியோ!
நீங்கள் அசிங்கமாக பேசினால் நானும் அசிங்கமாக பேசுவேன் என சீமானுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நடிகை விஜயலட்சுமி பேசியுள்ளார்.

சென்னை : நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறிவிட்டு ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகார் இப்போது பெரிய அளவில் பேசுபொருளாக வெடித்துள்ளது. முன்னதாக கடந்த 2011-ஆம் ஆண்டே விஜயலட்சுமி புகார் அளித்த நிலையில், விசாரணை சரியாக நடத்தப்படவில்லை என்பதால் வாபஸ் வாங்கினார். அதன்பிறகு மீண்டும் 2023-ஆம் ஆண்டு புகார் கொடுத்தார். எனவே, இந்த வழக்கு பல ஆண்டுகளாக தாமதமான நிலையில் இருந்து, சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றம் விசாரணையை தொடர உத்தரவிட்டது.
விசாரணையை தொடர்ந்து நேரில் ஆஜராக சீமானுக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்த நிலையில், அவர் ஆஜராகவில்லை என்பதால் அவருடைய வீட்டில் அந்த சம்மன் ஒட்டப்பட்டு அதை ஒருவர் கிழித்து இந்த விவகாரம் பெரிதாக வெடித்தது. பிறகு சீமான் பிப்ரவரி 28-ஆம் தேதி ஆஜரானார். அவரிடம் விசாரணையும் நடத்தப்பட்டது. இதனையடுத்து தற்போது, இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டில் உள்ளது, வரும் மார்ச் 7, 2025 அன்று விசாரணைக்கு வருகிறது.
இதற்கிடையில், விசாரணைக்கு அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த சீமான் ” சும்மா பாலியல் வழக்கு…பாலியல் வழக்கு என்று சொல்லிக்கொண்டு இருக்காதீர்கள். பாலியல் குற்றம் என்று நிரூபிக்கபட்டிருக்கிறதா? விரும்பி வந்து உறவு வைத்து கொண்டு சென்றவள் அவள் தான் எனவும், அவருடன் ஏற்பட்ட உறவு திருமணம் என்ற நிலைக்கு வரவில்லை. 6 அல்லது 7 மாதங்கள் தான் பழக்கம் இருந்தது நடிகை என்னை காதலித்திருந்தால் இப்படி முச்சந்திக்கு வந்திருக்க மாட்டார். நடிகை வைத்திருந்தது காதல் அல்ல, கண்றாவி” என மிகவும் ஆவேசத்துடன் பேசியிருந்தார்.
இதனையடுத்து, அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், வீடியோ வெளியீட்டு நடிகை விஜயலட்சுமி ஆவேசத்துடன் பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” சீமான் 2023-ல் எதுக்கு 50,ஆயிரம் பணம் கொடுத்தீங்க? உங்களுடைய மதுரை செல்வன் ஒரு கோடி ரூபாய் கொடுத்ததாக பொதுவெளியில் சொல்லி என்னுடைய மானத்தை வாங்கியதாக தான் நான் இப்போது வழக்கு கொடுத்துள்ளேன். மதுரை செல்வன் எதற்காக உன்னை காப்பாற்றிவிட்டுகிட்டு இருக்கான்? என்னுடைய பிள்ளை பெரிய பிள்ளையாக வளர்ந்துவிட்டது என கூறி எதற்காக என்னிடம் இருந்த வீடியோவை வாங்குனீங்க?
முதலில் வாங்குவீங்க..அப்புறம் உங்க ஆளுங்க எங்களை மிரட்டுவாங்க நான் பார்த்துட்டு இருக்கணுமா? முதலில் சீமான் நீங்கள் அநாகரீகமாக பேசாதீர்கள்..2020-ல் இருந்து 6 மாதங்கள் தான் பழகினேன் என்று சொல்கிறீர்கள் அப்புறம் எதற்கு நான் 2021-ல் புகார் கொடுத்தேன்? 2011-ல் நீங்கள் கொடுத்த டார்ச்சர் காரணமாக தான் போட்டிருக்கும் துணியுடன் வந்து புகார் கொடுத்தேன். இந்த மாதிரி அசிங்கமா பேசுற வேலையெல்லாம் வச்சிக்காத..நீங்க அசிங்கமா பேசினால் உங்களை விட நானும் அசிங்கமாக பேசுவேன்” எனவும் நடிகை விஜயலட்சுமி ஆவேசமாக பேசியுள்ளார்.