மாதத்தின் முதல் நாளே குறைந்த தங்கம் விலை… இன்றைய நிலவரம் என்ன?
24 கேரட் ஆபரண தங்கத்தின் விலையை பொறுத்தவரையில், கிராம் ரூ.8,662-க்கும், ஒரு சவரன் ரூ.69,296-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மாத தொடக்க நாளான இன்று (மார்ச் 1) கிராமுக்கு ரூ.20 குறைந்துள்ளது. தங்கம் விலை தொடர்ந்து 4ஆவது நாளாக குறைந்து வருவது கவனிக்கத்தக்கது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து, ஒரு கிராம் ரூ.7,940 க்கு விற்பனையாகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ஒரு சவரன் ரூ.63,520க்கு விற்பனையாகிறது.
மேலும், 24 கேரட் ஆபரண தங்கத்தின் விலையை பொறுத்தவரையில், கிராம் ரூ.8,662-க்கும், ஒரு சவரன் ரூ.69,296-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.