AFGvAUS : 274 டார்கெட்., பவுலிங்கில் மிரட்டிய ஆஸ்திரேலியா! நிலைத்து ஆடிய ஆப்கானிஸ்தான்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 273 ரன்கள் எடுத்துள்ளது.

AFGvAUS - 1st innings

லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 10வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று விளையாடுகின்றன. இந்தப் போட்டி லாகூரில் உள்ள கடாபி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது.

இதில் வெற்றி பெரும் அடுத்த சுற்றுக்கு தகுதி பெரும் என்பதால் இன்றைய போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதலில் பேட்டிங் செய்ய ஆப்கானிஸ்தான் அணி வீரர்களை ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் சீரான இடைவெளியில் விக்கெட் எடுத்தாலும் ஆப்கானிஸ்தான் வீரர்கள் சற்று நிலைத்து ஆடி ரன்கள் சேர்த்துவிட்டனர்.

ஆப்கானிஸ்தான் அணி சார்பாக, அதிகபட்சமாக செடிகுல்லா அடல் 85 ரன்கள்எடுத்தார். கடந்த போட்டியில் 177 ரன்கள் விளாசிய இப்ராஹிம் சத்ரான் இந்த போட்டியில் 22 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அஸ்மத்துல்லா உமர்சாய் 60 ரன்களும், கேப்டன் ஹஷ்மத்துல்லா ஷாஹிதி 20 ரன்களும் எடுத்து அவுட் ஆகினர்.

ரஹ்மானுல்லா குர்பாஸ் ரன் எதுவும் அடிக்காமலும், ரஹ்மத் ஷா 12 ரன்களும், முகமது நபி 1 ரன்னிலும், குல்பாடின் நைப் 4 ரன்னிலும், ரஷீத் கான் 19 ரன்னிலும், நூர் அகமது 6 ரன்னிலும் அவுட் ஆகினர். இறுதியில் 50 ஓவர்கள் முடிவில் 10 விக்கெட் இழப்புக்கு 273 ரன்கள் எடுத்து.

ஆஸ்திரேலியா அணி சார்பாக பென் ட்வார்ஷூயிஸ் 3 விக்கெட்டுகளையும், ஆடம் ஜம்பா 2 விக்கெட்டுகளையும், ஸ்பென்சர் ஜான்சன் 2 விக்கெட்டுகளையும், க்ளென் மேக்ஸ்வெல் மற்றும் நாதன் எல்லிஸ் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். இப்போட்டியில் வெற்றி பெற ஆஸ்திரேலியா அணி 50 ஓவர்களில் 274 ரன்கள் எடுக்க வேண்டும்.

கடந்த முறை 351 என்ற அதிகபட்ச ஸ்கோரையே அசால்ட்டாக சேஸ் செய்து இங்கிலாந்தை துவம்சம் செய்தது போல ஆஸ்திரேலியா ஜெயிக்குமா அல்லது இங்கிலாந்துக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது போல ஆஸ்திரேலியாவுக்கு ஆப்கானிஸ்தான் அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கிறதா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்