“விருப்பமில்லாமல் செய்தால் தான் அது பாலியல் வன்கொடுமை” சீமான் மீண்டும் சர்ச்சை பேச்சு!

விருப்பமில்லாமல் செய்தால் தான் அது பாலியல் வன்கொடுமையின் கீழ் வரும் என சர்ச்சைக்குரிய வகையில் சீமான் சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசியுள்ளார்.

NTK Leader Seeman

தருமபுரி : நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பாலியல் வழக்கு பதிவு செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணையை விரைந்து முடிக்க கோரிய சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து சென்னை வளசரவாக்கம் போலீசார் சீமானுக்கு சம்மன் அனுப்பி இருந்தனர்.

இந்த சம்மன் நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டில் ஒட்டப்பட்டு அதன் பிறகு அதனை ஒருவர் கிழித்து , அதனை விசாரிக்க சென்ற போலீசாரை நோக்கி துப்பாக்கி காட்டியதாக சீமான் வீட்டு பாதுகாவலர் அமல்ராஜ் கைது செய்யப்பட்டுள்ளார். இப்படியான சூழலில் நடிகை பாலியல் வழக்கு குறித்து இன்று தர்மபுரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசினார்.

சீமான் சர்ச்சை பேச்சு :

அப்போது அவர் கூறுகையில், ” என்ன, என் மீது பாலியல் வழக்கு? பாலியல் வழக்கு சொல்லிட்டா அது குற்றமாகிவிடுமா? ஆயிரம் பேர் ஆயிரம் சொல்வார்கள். முதலில் விசாரிக்க வேண்டும். எதோ நான் வயசுக்கு வந்த புள்ளைய தூக்கிட்டு போய் சோழ காட்டுக்குள்ள பாலியல் வன்கொடுமை (மாற்று சொல்) செய்து விட்டது போல பேசி வருகிறீர்கள்? உங்கள் மனநிலை என்ன,” என சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.

மேலும்,”  நான் அரசியல்வாதியாக இல்லாமல், சாதாரண சினிமா இயக்குனராக இப்போது எந்த வாய்ப்பும் இல்லாமல் இருக்கிறேன் என்றால் இதேபோல வழக்கு என்றால், இதுபற்றி பேசுவார்களா?” எனக் கேட்டார்.

மேலும், ” ஒரு முழு அதிகாரமும் சேர்ந்து என்னை சுத்துறீங்க? ஏனென்றால் என்னை பார்த்து நீங்க நடுங்கிடீங்க, பயந்துட்டீங்க, என்னை உங்களால் சமாளிக்க முடியவில்லை, நான் எடுத்துவைக்கும் அரசியல் கருத்துகளுடன் என்னுடன் மோதி ஜெயிக்க முடியவில்லை. அப்பப்போ அந்த பொம்பளைய முன்னாடி முன்னாடி நிறுத்துகிறீர்கள், இதில் வேற என்ன காரணம்?” என பேசினார்.

மீண்டும் சர்ச்சை :

மீண்டும் அதேபோல சர்ச்சைக்குரிய வகையில், ” ஏதோ கல்லூரியில் படிக்கும் புள்ளைய கடத்திட்டு போய் பாலியல் வன்கொடுமை (மாற்று சொல்) மாதிரி பேசுறீங்க?” என முகம் சுழிக்கும் தொனியில் பேசினார்.  ” என்னங்கடா உங்க நாடகம், எவ்வளவோ மக்கள் பிரச்னை இருக்கு இப்போ பெரியாரை பற்றி பேசுறீங்களே என கேக்குறீங்க, அதே போல, இப்போ எவ்வளவோ மக்கள் பிரச்சனை இருக்கு அதையெல்லாம் பேசல?” என செய்தியாளர் சந்திப்பில் பேசினார் சீமான்.

சீமானின் பேச்சுக்கள் அரசியல் களத்தில் மட்டுமல்லாது சமூக வலைதள பக்கங்களிலும் பல்வேறு எதிர்ப்புகளை எதிர்கொண்டு வருகிறது.

சேலத்தில்..,

இதனை அடுத்து சேலத்தில் பேசிய சீமான், “விருப்பமில்லாமல் செய்தால் தான் அது பாலியல் வன்கொடுமையின் கீழ் வரும். அதுதான் குற்றம். நீங்க விரும்பி இருந்தால் அதற்கு பெயரென்ன? 15 வருடமாக நீங்க என்னைய, என் குடும்பத்தை வன்புணர்வு செய்யுறீங்க. ” என மீண்டும் சர்ச்சைக்குரிய வகையில் பேசினார் சீமான்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்