AFG vs AUS : அரையிறுதிக்கு செல்லப்போவது யார்? டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு.!

இந்தப் போட்டியில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றால், 3 புள்ளிகளில் இருந்து 4 புள்ளிகளுடன் குரூப் பி பட்டியலில் முதலிடத்தில் இருக்கும்.

Afghanistan vs Australia

லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி 2025-இன் 10வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதுகின்றன. இந்தப் போட்டி லாகூரில் உள்ள கடாபி மைதானத்தில் நடைபெறுகிறது. போட்டி இந்திய நேரப்படி பிற்பகல் 2:30 மணிக்கு தொடங்கவுள்ள நிலையில், தற்போது டாஸ் போடபட்டது.

இருப்பினும், பிப்ரவரி 28 அன்று லாகூரில் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது நடந்தால் போட்டி தொடங்கும் நேரத்தில் தாமதமாகலாம் என்று கூறப்படுகிறது.

இந்தப் போட்டி ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளுக்கும் மிகவும் முக்கியமான போட்டியாகவும். இந்தப் போட்டியில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றால், 3 புள்ளிகளில் இருந்து 4 புள்ளிகளுடன் குரூப் பி பட்டியலில் முதலிடத்தில் இருக்கும்.

தற்போது தென்னாப்பிரிக்காவும் ஆஸ்திரேலியாவும் 3-3 புள்ளிகளைப் பெற்றுள்ளன. அதே நேரம், ஆப்கானிஸ்தானிடம் தோற்றால் ஆஸ்திரேலியா மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்படும். இப்படிப்பட்ட சூழ்நிலையில், நாளை கராச்சியில் உள்ள தேசிய மைதானத்தில் நடைபெறும் தென்னாப்பிரிக்கா vs இங்கிலாந்து போட்டியும் நாக் அவுட்டாக மாறும்.

மறுபுறம், ஆப்கானிஸ்தான் ஆஸ்திரேலியாவிடம் தோற்றால், அது போட்டியிலிருந்து வெளியேறும். மேலும் தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா 2025 சாம்பியன்ஸ் டிராபியின் குரூப் B இலிருந்து அரையிறுதிக்கு செல்லும்.

ஆப்கானிஸ்தான் அணி:

கேப்டன் ஹஷ்மத்துல்லா ஷாஹிதி  தலைமையிலான அணியில்,  ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் சத்ரான், செடிகுல்லா அடல், ரஹ்மத் ஷா, அஸ்மத்துல்லா உமர்சாய், முகமது நபி, குல்பாடின் நைப், ரஷீத் கான், நூர் அகமது, ஃபசல்ஹாக் ஃபரூக்கிஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

ஆஸ்திரேலிய அணி:

கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் தலைமையிலான அணியில், மேத்யூ ஷார்ட், டிராவிஸ் ஹெட், மார்னஸ் லாபுஷாக்னே, ஜோஷ் இங்கிலிஸ், அலெக்ஸ் கேரி , க்ளென் மேக்ஸ்வெல், பென் ட்வார்ஷூயிஸ், நாதன் எல்லிஸ், ஆடம் ஜம்பா, ஸ்பென்சர் ஜான்சன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்