முதல்ல அரசியல் நாகரிகத்தை கத்துக்கோங்க! விஜய்க்கு CPI மாநில செயலாளர் முத்தரசன் அட்வைஸ்!
திமுக நாடகமாடுகிறது என்ன அர்த்தத்தில் இதை சொல்கிறார் என த.வெ.க தலைவர் விஜய்க்கு CPI மாநில செயலாளர் முத்தரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா இன்று மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட அக்கட்சி தலைவர் விஜய் பேசிய விஷயங்கள் அரசியல் வட்டாரத்தில் ஹாட் டாப்பிக்கான ஒரு விஷயமாக மாறியுள்ளது . நிகழ்ச்சியில் பேசிய
இந்நிலையில், விஜயின் பேச்சு குறித்து அரசியல் தலைவர்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த CPI மாநில செயலாளர் முத்தரசனிடம் செய்தியாளர்கள் விஜய் திமுக குறித்து பேசியது பற்றியும்..மும்மொழி குறித்து பேசியது பற்றியும் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதில் அளித்த அவர் ” விஜய் கட்சி ஆரம்பித்த அவருடைய கட்சி கூட்டத்தில் இதனை பேசுகிறார்..எனவே, அவர்களுடைய கட்சி ஆட்களுக்கு நம்பிக்கை ஊட்டவேண்டும் என்ற காரணத்தால் இப்படி பேசிக்கொண்டு இருக்கிறார்.
அவர் பேசப்பட்டும் ஆனால் வேஷம் போடுகிறார்கள் என அவர் சொல்வது ஏற்புடையது அல்ல. தமிழ்நாட்டில் இந்தி திணிக்கப்படுவது என்பது புதிதான விஷயம் இல்லை. ஏற்கனவே கடந்த காலங்களில் திணிக்கப்பட்டு இருக்கிறது. அப்படி தான் இந்த முறை மோடி தலைமையிலான ஆட்சியில் இந்தியை திணிக்க முயற்சிகள் செய்து வருகிறார்கள். அதனை தமிழ்நாட்டில் இருக்கும் விஜய் உட்பட அணைத்து கட்சிகளும் எதிர்த்து வருகிறது.
திமுக மட்டுமில்லை மற்ற கட்சிகளும் எதிர்த்து வருகிறது. எனவே, இதில் திமுக எப்படி நாடகமாடுகிறது என்று சொல்ல முடியும்? அவர் என்ன அர்த்தத்தில் சொல்கிறார் என்று எனக்கு தெரியவில்லை. நடிக்கிறது என்பது சினிமாவில் நடிக்கலாம். விஜய் அதில் சிறந்த நடிகர் தான். அவருக்கு கொடுக்கப்படும் கதாபாத்திரங்களுக்கு ஏற்றபடி நடிப்பார்.
ஆனால், அவர் திமுக நடிக்கிறது நாடகமாடுகிறது என்று சொல்வது ஏற்றுக்கொள்ளவே முடியாது. அவருடைய கருத்து அரசியல் கருத்து இல்லை அது நிகரிக்கப்படவேண்டும் ” என முத்தரசன் கூறினார். அதனைத்தொடர்ந்து செய்தியாளர் விஜய் சாதாரணமாக ப்ரோ ப்ரோ என்று இயல்பாக பேசுகிறார் அதை பற்றி என்ன நினைக்கிறீர்கள்? என்று கேட்டனர்.
அதற்கும் பதில் அளித்த முத்தரசன் ” அரசியல் நாகரிகம் என்னவென்றால் அவர் கற்றுக்கொள்ளவேண்டும் என்பது தான் சொல்ல முடியும். எப்போதுமே கொள்கை ரீதியான கருத்து வேறுபாடுகள் ஒவ்வொரு கட்சிகளுக்கும் கண்டிப்பாக இருக்கும் இல்லை என்று சொல்லவே முடியாது. எனவே கொள்கை ரீதியாக விமர்சனம் செய்வது தான் அரசியல் நாகரீகம்..அந்த நாகரீகத்தை கற்றுக்கொள்ளவேண்டும்” எனவும் முத்தரசன் தெரிவித்துள்ளார்.