உங்கள் குழந்தைகளுக்கு மட்டும் மூன்றுமொழி …வாட் ப்ரோ? விஜய் ஸ்டைலில் பதிலடி கொடுத்த அண்ணாமலை!

விஜய் சொல்வதை தனது வாழ்க்கையிலும் கடைபிடிக்க வேண்டும் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

annamalai about vijay

சென்னை :  தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா இன்று மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய அக்கட்சி தலைவர் விஜய் ” கல்வி நிதி விவகாரத்தில் எல்கேஜி, யூகேஜி பிள்ளைகள் போல் சண்டையிடுகிறார்கள். “இங்கே எவ்வளவு சீரியஸாக ஒரு பிரச்னை நடந்துகொண்டிருக்கிறது.? இவங்க ரெண்டு பேரும், அதாங்க ஃபாசிஸமும் பாயாசமும் – நம்ம கொள்கை எதிரியும் அரசியல் எதிரியும் பேசி செட்டிங் செய்துகொண்டு சோஷியல் மீடியாவில் ஹேஷ்டேக் போட்டு விளையாடிக் கொண்டு இருக்கிறார்கள்” என பாஜக மற்றும் திமுகவை விமர்சனம் செய்து பேசியிருந்தார்.

இதனையடுத்து விஜயின் பேச்சுக்கு பதிலளிக்கும் விதமாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தபோது பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” தவெக இரண்டாம் ஆண்டு துவக்க விழாவில் சகோதரர் விஜய் மாநில அரசையும், மத்திய அரசையும் குறைகூறி பேசியுள்ளார். எதற்காக lkg பிள்ளைகள் மாதிரி சண்டைபோட்டு கொள்கிறீர்கள் என்றெல்லாம் பேசியிருக்கிறார். நான் இப்போது அண்ணன் விஜயை பார்த்து ஒரு கேள்வியை கேட்க விரும்புகிறேன்.

உங்கள் குழந்தைகளுக்கு மட்டும் மூன்று மொழி…நீங்கள் நடத்தும் பள்ளியில் மூன்று மொழி ஆனால் தவெக தொண்டர்களுக்கு இரண்டு மொழியா? வாட் ப்ரோ..அதாவது சொன்னதை நீங்கள் உங்களுடைய வாழ்க்கையில் என்ன நடந்துகொள்கிறீர்களோ அதைபோலவே செய்யுங்கள் ப்ரோ.

“கெட்அவுட்” எனும் கையெழுத்து இயக்கத்தை துவங்கி வைத்து அதில் விஜய் கையெழுத்து போடுகிறார்..அண்ணன் புஸ்ஸி ஆனந்த் கையெழுத்து போடுகிறார். ஆனால், அண்ணன் பிரசாத் கிஷோர் கையெழுத்து போடாமல் சென்றுவிட்டார். அவர் செய்த செயலிலே கெட் அவுட் என்பதற்கு என்ன மதிப்பு என்பது தெரிந்துவிட்டது.

அதனை விஜய் அவர்களுக்கு ஆலோசனை சொல்ல கூடிய பிரசாத் கிஷோர் செய்த நடவடிக்கை நமக்கு காண்பித்துக்கொடுத்துவிட்டது. எனவே, இது போல இனிமேல் பேசவேண்டாம் என நான் சகோதரர் விஜயை வலியுறுத்தி தெரிவித்து கொள்கிறேன்” எனவும் அண்ணாமலை விஜய் ஸ்டைலில் பேசி பதிலடி கொடுத்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்