“விஜய் தான் எதிர்கட்சி தலைவர்… அனைத்து அஜெண்டாவும் ரெடி – ஆதவ் அர்ஜுனா அதிரடி.!
தவெக இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவில் பேசிய ஆதவ் அர்ஜுனா, தமிழகத்தில் கடனை ஏற்படுத்தி அதிலும் ஊழல் செய்யும் தமிழ்நாடு அரசு என்று குறிப்பிட்டு குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னை : மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் நடைபெற்று வரும் தமிழக வெற்றிக் கழகத்தின் 2ஆம் ஆண்டு தொடக்க விழாவில் #GETOUT கையெழுத்து இயக்கத்தை விஜய் தொடங்கி வைத்தார். மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக இந்த கையெழுத்து இயக்கத்தை தவெக கையில் எடுத்துள்ளது.
விழா மேடையில் ‘நிரந்தர தலைவர் விஜய்’ என குறிப்பிட்டு பேச தொடங்கிய தவெக தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா, ” பிறப்பால் ஒரு தலைவர் உருவாகக்கூடாது, மன்னராட்சி நீடிக்கக்கூடாது என பேசியதற்காக பல சூழ்ச்சிகள் என்னை சூழ்ந்தது.
அந்த சமயத்தில் தலைவர் விஜய்யிடமிருந்து எனக்கு அழைப்பு வந்தது. மன்னராட்சி என உண்மையை பேசியதால், சூழ்ச்சிகள் என்னை சூழ்ந்தது. பல்வேறு சூழ்ச்சிகள் என்னை சூழ்ந்தபோது, தவெகவில் இணைய தலைவர் விஜய் என்னை அழைத்தார். தலைவருடன் சேர்ந்து உரையாடிய போது எந்தளவுக்கு கொள்கைரீதியாக அவர் உறுதியாக இருக்கிறார் என்பதை அறிந்து என்னை கட்சியில் இணைத்துக்கொண்டேன்” என்றார்.
விஜய்க்கு ரசிகர் முதல்வர்
எங்களுடைய தலைவரை நடிகர் என்று விமர்சிக்கிறார்கள். அவர் இன்னும் ஒரு படத்தை முடித்துவிட்டு மக்களுக்காக வருகிறேன் என கூறிவிட்டார். ஆனால், எங்களின் தலைவரை பார்த்து நீங்கள் ஏன் நடிக்கிறீர்கள்? முதல்வரும் விஜய்க்கு ரசிகர் தான், விஜய் அவர்கள் போடும் பேண்ட் சட்டையை கூட அப்படியே போடுகிறார். நாம் விஜய் அவர்களை அண்ணன் என்று அழைப்போம், அதே போல பிறப்பால் பதவிக்கு வந்த ஒருவர் அதையே பின்பற்றுகிறார். ஆளுங்கட்சி தூக்கத்தில் கூட நம்மை அடக்க நினைக்கிறார்கள்.
விஜய்தான் எதிர்க்கட்சி தலைவர்
தளபதி விஜய்-யை, தலைவர் என்று அழைக்கக்கூடிய பரிணாமத்தை நோக்கி பயணிக்கிறோம். அடுத்த 63 வாரத்துக்கு நாம்தான் (தவெக) எதிர்க்கட்சி, விஜய்தான் எதிர்க்கட்சி தலைவர். 1967ல் அண்ணா ஏற்படுத்தியது போல், 1977ல் எம்.ஜி.ஆர் ஏற்படுத்தியது போல, மீண்டும் ஒரு பிளவு ஏற்படும். அதற்கு அஜென்டா ரெடி. பிளானிங் ரெடி. இன்னும் பல தலைவர்கள் தவெகவுக்கு வரப் போகிறார்கள். இன்னும் பல பூகம்பங்கள் அரசியலில் நடக்கப் போகிறது என்றார்.
கடன் வாங்கி ஊழல் செய்யும் விளம்பர அரசு
தமிழகத்தில் கடனை ஏற்படுத்தி, அதிலும் ஊழல் செய்கின்றனர். 4 ஆண்டுகளில் ரூ.4 லட்சம் கோடி கடன் பெற்று ஊழல் செய்யும் ஆட்சி தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டிற்கு கடனை உருவாக்கி ஊழல் செய்துகொண்டிருப்பதாக ஆதவ் அர்ஜுனா குற்றச்சாட்டை முன் வைத்தார். திராவிட கட்சிகள் கடன் வாங்கி ஊழல் செய்து மக்களுக்கு சுமையை சேர்த்து வைத்துள்ளதாக ஆதவ் அர்ஜுனா குற்றம் சாட்டியுள்ளார்.
புஸ்ஸி ஆனந்திற்கும், தனக்கும் எந்தப் பிரச்னையும் இல்லை எனக் கூறிய அவர், பிரித்தாலும் கொள்கையை திமுகவினர் தேடுவதாகக் சாடினார். விளம்பரத்திற்காக சினிமாவில் நடித்த உதயநிதி தற்போது துணை முதல்வராக வளர்ந்தது தான் திமுகவின் சாதனை என்றும் கடுமையாக விமர்சித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
மத கஜ ராஜா வசூலை மொத்தமாக எரித்த டிராகன்! 5 நாட்களில் இவ்வளவு வசூலா?
February 26, 2025
AFG vs ENG: இந்த டார்கெட்டை அடிச்சு காமிங்க! சதம் விளாசி இங்கிலாந்துக்கு பெரிய இலக்கு வைத்த இப்ராஹிம்!
February 26, 2025
முதல்ல அரசியல் நாகரிகத்தை கத்துக்கோங்க! விஜய்க்கு CPI மாநில செயலாளர் முத்தரசன் அட்வைஸ்!
February 26, 2025
இப்படியா விளையாடுவீங்க? பாகிஸ்தானை விளாசி தள்ளிய ஷோயிப் அக்தர்!
February 26, 2025