LIVE : தவெக இரண்டாம் ஆண்டு தொடக்க விழா முதல்… பாஜக அலுவலக திறப்பு விழா வரை.!
இன்றயை அரசியல் செய்திகள் முதல் சினிமா செய்திகள் வரை முக்கியமான நிகழ்வுகள் கீழே விவரமாக நேரலையாக கொடுக்கப்பட்டு வருகிறது.

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் 2ஆம் ஆண்டு விழா மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் உள்ள தனியார் ஓட்டலில் இன்று காலை நடைபெறவுள்ளது. தவெக 2ஆம் ஆண்டு விழாவையொட்டி தலைவர் விஜய் சிறப்பு உரை நிகழ்த்த உள்ளார். தேர்தல் வியூகம், சுற்றுப்பயணம், கூட்டணி உள்ளிட்டவை தொடர்பாக விஜய் உரையாற்ற வாய்ப்புள்ளது.
மேலும், இரண்டு நாள் பயணமாக, தமிழ்நாடு வந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக மாவட்ட அலுவலகத்தை இன்று காலை திறந்துவைக்கிறார். மேலும், கோவை ஈஷா யோகா மையத்தில் இன்று இரவு நடைபெறும் மகா சிவராத்திரி விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.