வெயிட்டிங்லயே வெறி ஆகுது! ‘குட் பேட் அக்லி’ டீசர் அப்டேட் கொடுத்த படக்குழு!
குட் பேட் அக்லி படத்தின் டீசர் வரும் பிப்ரவரி 28-ஆம் தேதி வெளியாகும் என படத்தின் இயக்குநர் ஆதிக் ரவிசந்திரன் அறிவித்துள்ளார்.

சென்னை : நடிகர் அஜித் குமார் நடித்துள்ள ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தின் டீசர் பிப்ரவரி 28, 2025 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார், மேலும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படம் வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இப்போதே ப்ரோமோஷன் பணிகளை படக்குழு தொடங்கியுள்ளது.
இந்த திரைப்படத்தினை புஷ்பா படங்களை தயாரித்த மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து வருவதன் காரணமாக கண்டிப்பாக ப்ரோமோஷன் பற்றி கவலையே படவேண்டாம். அதன் ஒரு பகுதியாக தான் ஏற்கனவே குட் பேட் அக்லி படத்தில் த்ரிஷா இணைந்துள்ளதாகவும், படத்தின் டீசர் விரைவில் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
அதனைத்தொடர்ந்து இப்போது படத்தின் டீசர் வரும் பிப்ரவரி 28-ஆம் தேதி வெளியாகும் என படக்குழு சின்ன ப்ரோமோ ஒன்றை கட் செய்து வெளியீட்டு படத்தின் மீது இருக்கும் எதிர்பார்ப்பை அதிகமாக்கியுள்ளனர். இந்த ப்ரோமோவில் அஜித் முகத்தை காட்டாமல் முழுவதுமாக டீசரில் காட்டலாம் என திட்டமிட்டு சர்ப்ரைஸாக வைத்துள்ளது தெரிகிறது.
டீசரில் ஒரு லுக்கில் அஜித் வந்தார் என்றால் ரசிகர்கள் எப்படி கொண்டாடுவார்கள் என்று சொல்லியே தெரியவேண்டாம். ஆனால், இந்த ப்ரோமோவை வைத்து பார்க்கும்போது 3 அஜித் லுக் இருப்பதால் டீசரை பார்க்க ஆவலுடன் காத்துள்ளனர். அஜித் லுக் மற்றும் டீசர் எப்படி இருக்கும் என்பதை பார்க்க ஒரு பக்கம் எதிர்பார்ப்பு இருந்தாலும் இந்த ப்ரோமோவிலே இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தன்னுடைய பின்னணி இசையில் அனைவரையும் கவர்ந்துவிட்டார். அவரும் தனது சமூக வலைத்தள பக்கத்தில் சம்பவம் இருக்கு என கூறியுள்ளதால் இன்னுமே படத்தின் மீது இருக்கும் எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.
#GoodBadUglyTeaser on February 28th ❤️🙏🏻 #AjithKumar sir @MythriOfficial @SureshChandraa sir ❤️🙏🏻 #GoodBadUgly from April 10th❤️🙏🏻 pic.twitter.com/0IFdpWCxFM
— Adhik Ravichandran (@Adhikravi) February 25, 2025
லேட்டஸ்ட் செய்திகள்
சீக்கியர் கொலை வழக்கு : சஜ்ஜன் குமாருக்கு மீண்டும் ஆயுள் தண்டனை வழங்கிய டெல்லி நீதிமன்றம்!
February 25, 2025
AUSvSA : ‘குறுக்கே வந்த கவுசிக் மழை’… போட்டியை ரத்து செய்தது ஐசிசி!
February 25, 2025
மு.க.ஸ்டாலின், ஓபிஎஸ், விஜய் சேதுபதி, விஜயின் மகன்.., களைகட்டும் ஜி.கே.மணி இல்ல திருமண விழா!
February 25, 2025
“விஜய் கட்சி ஆரம்பித்த பிறகு எனது கட்சியில்..,” சீமான் ‘சாஃப்ட்’ பதில்!
February 25, 2025