கருப்பு பெயிண்ட் அடிக்கிற முன்னாடி ஸ்கூல் போய் படிச்சிட்டு வாங்க…அண்ணாமலை பேச்சு!
முதல்வர் ஸ்டாலின் நல்ல மன ஆரோக்கியத்துடன் இருக்கிறாரா என்பதை சோதித்துப் பார்க்க வேண்டும் என பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சென்னை : முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று காலை தனது முகநூல் பக்கத்தில் தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்கிற முறையில், 2026-ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையிலான மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கை மிகுந்த ஆபத்தாக இருப்பதை அனைவரின் கவனத்துக்கும் கொண்டு வருகிறேன். மக்கள் தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் தமிழ்நாடு முதலிய தென் மாநிலங்கள் மிகச் சிறப்பாகச் செயல்பட்டுள்ளன. ஆனால், அதுவே நாடாளுமன்றத்தில் நம் பலம் குறையக் காரணமாகி விடும்; நம் குரலை நசுக்கிவிடக் கூடும் என்றால் அது எவ்வகையில் நியாயமாகும்?
ஜனநாயக முறையில் பிரதிநிதித்துவத்தை மேம்படுத்தும் எந்த நடவடிக்கையினையும் செய்யவே கூடாது என்பதல்ல எங்கள் வாதம். அதற்காக, தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவத்தில் சமரசம் செய்துகொள்ளும் பேச்சுக்கே இடமில்லை. கூட்டாட்சியியல் கோட்டுபாடுகளைப் பாதுகாக்கும் விதத்தில், நியாயமான, வெளிப்படைத்தன்மை மிக்க ஒரு வழிமுறையைப் பின்பற்றுங்கள் என்றுதான் நாங்கள் கேட்கிறோம்.தமிழ்நாட்டின் எதிர்காலத்தைப் பாதிக்கும் இந்த மிக முக்கியப் பிரச்சினையைப் பற்றிக் கலந்தாலோசிப்பதற்காக, தமிழ்நாட்டில் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் அனைத்திற்கும் அழைப்பு விடுக்கிறேன்” என கூறியிருந்தார்.
முதல்வரின் இந்த பதிவை பார்த்தவுடன் தனக்கு ஒரு சந்தேகம் வந்ததாக இது பற்றி தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவையில் செய்தியாளர்களை சந்தித்தபோது தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் ” எனக்கு இன்று காலை முதல்வர் மு.க.ஸ்டாலின் முகநூல் பதிவை பார்த்தவுடன் நல்ல மன ஆரோக்கியத்துடன் இருக்கிறாரா என்கிற கேள்வி வந்தது. அமெரிக்க ஜனாதிபதி எடுத்துக்கொண்டோம் என்றால் ஆண்டுக்கு ஒரு முறை மருத்துவர் ஒருவரை அழைத்து நாம் நல்ல மன ஆரோக்கியத்துடன் இருக்கிறோமா என்பதை பரிசோதனை செய்து பார்ப்பார்.
நான் முதல்வரை தவறாக சொல்லவில்லை…இப்போது முதல்வர் ஸ்டாலின் நல்ல மன ஆரோக்கியத்துடன் இருக்கிறாரா என்பதை சோதித்துப் பார்க்க வேண்டும் என அவருடைய முகநூலை பார்க்கும்போது எனக்கு தோணுகிறது. தமிழகத்தை வழிநடத்த அவர் சரியாக இருக்கிறாரா என்கிற சந்தேகம் எனக்கு எழுந்திருக்கிறது. யாரும் அதை பற்றி கருத்து சொல்லாமல் இருக்கும்போது எதற்காக திடீரென அணைத்து கட்சி கூட்டம் கூட்ட வேண்டும்?
தொகுதிகள் மறுசீரமைப்பு விவகாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதற்காக பயத்தை ஏற்படுத்துகிறார்? மறுசீரமைப்பால் தென் மாநிலங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.தமிழகத்திற்கு பிரச்னை இல்லாமல் தொகுதி மறுசீரமைப்பு செய்ய வேண்டியது எங்களின் கடமை” எனவும் அண்ணாமலை தெரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து பேசிய அவர் ” திமுகவை மக்கள் இனிமேல் நம்பவே மாட்டார்கள். ஒரு 4 தொண்டர்கள் தான் கருப்பு பெயிண்டை தூக்கி கொண்டு பெயிண்ட் அடித்துக்கொண்டு இருக்கிறார்கள். அதிலும் ஹிந்தி எது ஆங்கிலம் எது என்று தெரியாமல் ஆங்கிலத்தில் எழுதியிருக்கும் எழுத்துக்களுக்கு கருப்பு பெயிண்ட் அடிக்கிறார்கள். அவர்களுக்கு எல்லாம் நான் சொல்லி கொள்வது என்னவென்றால் முதலில் பள்ளிக்கூடம் சென்று படிங்கள்.
இதெல்லாம் பார்த்துவிட்டு முதல்வர் மும் மொழி குறித்து பேசினால் நம்மளை வீட்டிற்கு அனுப்பிவிடுவார்கள் இதனை அப்படியே மடைமாற்றி சம்பந்தமே இல்லாமல் தொகுதி மறுசீரமைப்பு பற்றி பேசுவதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்” எனவும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
சீக்கியர் கொலை வழக்கு : சஜ்ஜன் குமாருக்கு மீண்டும் ஆயுள் தண்டனை வழங்கிய டெல்லி நீதிமன்றம்!
February 25, 2025
AUSvSA : ‘குறுக்கே வந்த கவுசிக் மழை’… போட்டியை ரத்து செய்தது ஐசிசி!
February 25, 2025
மு.க.ஸ்டாலின், ஓபிஎஸ், விஜய் சேதுபதி, விஜயின் மகன்.., களைகட்டும் ஜி.கே.மணி இல்ல திருமண விழா!
February 25, 2025
“விஜய் கட்சி ஆரம்பித்த பிறகு எனது கட்சியில்..,” சீமான் ‘சாஃப்ட்’ பதில்!
February 25, 2025