கலைஞர் நூற்றாண்டு அகாடமி : பாக்ஸிங்-ஐ கண்டு கழித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!
சென்னை கோபாலபுரத்தில்,சர்வதேச தரத்தில் உருவாக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு குத்துசண்டை அரங்கத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

சென்னை : சென்னை கோபாலபுரம் மாநகராட்சி விளையாட்டு திடலில் அமைக்கப்பட்டுள்ள குத்துச்சண்டை அகாடமியை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில், சுமார் ரூபாய் 8 கோடி மதிப்பில், 2,500 சதுர அடியில் 2 பாக்சிங் ரிங் உடன், ஒரே சமயத்தில் 750 பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த குத்துச்சண்டை அகாடமியை திருந்து வைத்த பின், சிறுவர் – சிறுமியர்களுக்கான குத்துச்சண்டை போட்டி நடைபெற்றது. அதனை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டு கழித்தார். மேலும், சென்னை கிண்டியில் நடைபெற்ற நிகழ்வில் CtrlS தகவல் தரவு மையத்தை காணொளி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில் ரூ.8 கோடி மதிப்பீட்டில் சென்னை கோபாலபுரத்தில் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு குத்துசண்டை அகாடமி கட்டடத்தை மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள் திறந்து வைத்துச் சிறப்பித்தார்!#DMK4TN pic.twitter.com/VNRTvtDV6A
— DMK (@arivalayam) February 25, 2025
அம்பத்தூரில் ரூ.4,000 கோடியில் 500 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் தரவு மையம் CtrlS தகவல் தரவு மையம் தமிழ்நாட்டின் டிஜிட்டல் எதிர்காலத்தை வலுப்படுத்த உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
4,000 கோடி ரூபாய் முதலீட்டில், 500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் அம்பத்தூரில் அமைத்துள்ள CtrlS சென்னை தகவல் தரவு மையத்தை மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள் திறந்து வைத்து சிறப்பித்தார். #DMK4TN pic.twitter.com/ackUxy7liw
— DMK (@arivalayam) February 25, 2025
லேட்டஸ்ட் செய்திகள்
மு.க.ஸ்டாலின், ஓபிஎஸ், விஜய் சேதுபதி, விஜயின் மகன்.., களைகட்டும் ஜி.கே.மணி இல்ல திருமண விழா!
February 25, 2025
“விஜய் கட்சி ஆரம்பித்த பிறகு எனது கட்சியில்..,” சீமான் ‘சாஃப்ட்’ பதில்!
February 25, 2025