மனிஷா இந்த படத்துல… அதுவும் இந்த கேரக்டேர்லயா நடிக்கிறாங்க…!!!!
வழக்கு என் படத்தில் பள்ளி மாணவியாக அறிமுகமானவர் மனிஷா யாதவ். அதன்பிறகு பல படங்களில் நடித்தவர், ஒரு குப்பை கதை படத்தில் அழுத்தமான குடும்ப பெண் வேடத்தில் நடித்து பாராட்டு பெற்றார். இப்பொது சண்டமுனி என்ற திகில் படத்தில் நடித்து வரும், இதன்பிறகு வெற்றிமாறன் தயாரிப்பில், திருநாள் படத்தை இயக்கிய ராம்நாத் இயக்கம் படத்தில் நாயகியாக நடிக்கிறார். இப்படம் திரில்லர் கதையில் உருவாகிறது. ஒரு குப்பை கதை படத்தில் நடித்தது போன்ற அழுத்தமான கிராமத்து பெண் வேடத்தில் மனிஷா நடிக்கிறார்.