என்னை பத்தி ஏன் பேசுறீங்க? அன்புமணி பேச்சால் கடுப்பான மயிலாடுதுறை எம்.பி. சுதா!

மக்களுக்கு நல்லது நினைத்தால், எங்கே நின்றாலும் மக்கள் வெல்ல வைப்பார்கள் என மயிலாடுதுறை எம்பி சுதா அறிக்கையில் கூறியுள்ளார்.

mp sudha anbumani

சென்னை : நேற்று கும்பகோணத்தில் வன்னியர் சங்கம் சார்பில் மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் ” சென்னையில் இருந்து வந்த வேட்பாளரை ஜெயிக்க வைத்துள்ளீர்கள் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மயிலாடுதுறை எம்.பி. சுதாவை மறைமுகமாக தாக்கி  பேசியிருந்த நிலையில், அவருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக மிகவும் காட்டத்துடன் அத்தொகுதி எம்.பி. சுதா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் ” கடந்த 23 ஆம் தேதி கும்பகோணத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேசும் போது, நாட்டில் எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கிறது. அவற்றையெல்லாம் பேசுவதை விட்டு விட்டு, தேவையில்லாமல் என்னைப் பற்றி பேசும் போது, இந்த தொகுதிக்கு சம்மந்தமில்லாத சென்னையிலிருந்து யாரோ ஒருவர், எங்கிருந்தோ வந்தார் என்றும், தெரியாமல் வாக்களித்து வெற்றி பெறச் செய்தீர்கள் என்றும் பேசியது, தொடர்ந்து சமுதாய மக்களால் தோற்கடிக்கப்படுகின்ற உங்கள் விரக்தியையும், வயிற்றெரிச்சலையும் உணர முடிகிறது.

ஒரு பெண் என்றும் பாராமல் பொதுவெளியில் நக்கல், நையாண்டித்தனமாக பேசியதன் மூலம் நீங்கள் யார், நீங்கள் பெண்களை எந்த அளவிற்கு மதிக்கிறாய் என்பதை அனைவரும் அறிவார்கள் இதுதான் உங்களது பண்பும் கூட. சென்னையில் பிறந்து வளர்ந்த உங்கள் மனைவி சௌமியா அன்புமணி மற்றும் நீங்கள் தர்மபுரியில் நிற்கலாம். சென்னையில் வசித்து இன்று மயிலாடுதுறையில் நிரந்தரமாக குடியேறிய நான் மயிலாடுதுறையில் தேர்தலில் நின்று வெற்றி பெற்றால் பெரும் குற்றமா?

உங்கள் வீட்டுபெண்களுக்கு ஒரு நீதி, அடுத்தவர் வீட்டுபெண்களுக்கு ஒரு நீதியா ? இதுதான் நீங்கள் கற்றுக் கொண்ட, கற்றுக் கொடுக்கும் சமூக நீதியா? நான் காங்கிரஸ் கட்சியில் மாணவர் காங்கிரஸ், இளைஞர் காங்கிரஸ் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளேன். வழக்கறிஞர் பிரிவில் மாநில அளவிலும், பிறகு மகளிர் காங்கிரஸ் தேசிய செயலாளர், தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் தலைவர் என்று கட்சியில் 20 ஆண்டுகள் கடுமையாக உழைத்து எவ்வித பின்புலம் இல்லாமல் பணியாற்றி வருகிறேன். அப்படி எங்காவது அன்புமணி ராமதாஸ் ஆகிய நீங்கள், மத்திய அமைச்சர் ஆவதற்கு முன்பு, ஏழை வன்னியர் சமூக மக்களின் நலனுக்காக எங்காவது பேசியது உண்டா ? போராடியது உண்டா ? சிறை சென்றதுண்டா?

நான் மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதிக்கு வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டதற்கு அன்புத் தலைவர் ராகுல்காந்தி அவர்கள் தான் காரணம். ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. மத்தியில் ஆட்சிக்கு வந்த பிறகு, நாடு முழுவதும் மக்களை மதம், சாதி என்ற வெறுப்புணர்வை தூண்டி அரசியல் ஆதாயம் பெறுகிறார்கள். இதை மாற்றி மக்களை அன்பால் பிணைக்க வேண்டுமென்ற உன்னதமான நோக்கத்திற்காக தலைவர் ராகுல்காந்தி அவர்கள் பாரத் ஜோடோ யாத்திரையை கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 4000 கி.மீ. தூரம் (5 மாதங்களாக) நடந்தே சென்றதை நாடே அறியும்.

அந்த நடை பயணத்தில் என்னையும் இணைத்துக் கொண்டேன் என்பது ஒரு கட்சிக்கு தலைவராக இருக்கும் உங்களுக்கு தெரியாதா ? உங்களைப் போன்றவர்கள் அப்பாவி மக்களை சாதியால் பிரித்து அரசியல் செய்கிறீர்கள். அந்த அடிப்படையில் தான் நீங்கள் இன்று வரை கொள்கை ரீதியாக ஆர்.எஸ்.எஸ்.உடன் கூட்டணியில் பயணிக்கிறீர்கள். ஒரு மத்திய அமைச்சர் பதவி கொடுக்க மாட்டார்களா என்ற ஏக்கத்தில், அது நிறைவேறப் போவதில்லை.

இந்த வரலாறெல்லாம் உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. முடிந்தால் உங்கள் தந்தையிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். தனது அரசியல் பொது வாழ்க்கையில் மிகவும் நேர்மையானவராகவும், உண்மையாகவும், எளிமையானவராகவும் லட்சக்கணக்கான வன்னியர் மக்களுக்கு பாடுபட்ட திரு. காடுவெட்டி குரு அவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு, உயிருக்கு போராடிய போது ஒரு குறிப்பிட்ட குறைந்தபட்ச தொகையை கட்டினால் குரு அவர்களை வெளிநாட்டிற்கு அனுப்பி காப்பாற்றி விடலாம் என்று மருத்துவமனை நிர்வாகம் கூறியதாகவும், அதற்கு நீங்கள் உதவவில்லை.

அதன் விளைவு அண்ணன் காடுவெட்டி குரு அவர்கள் இறந்து விட்டார் என்ற குற்றச்சாட்டை இன்றுவரை அண்ணன் குரு அவர்களின் தாய், மனைவி, பிள்ளைகள் முன் வைக்கும் குற்றச்சாட்டிற்கு பதில் அளிக்காமல் மௌனம் காப்பது ஏன் ? இதுதான் உங்கள் வன்னியர் சமூகப் பற்றா ? இந்த கேள்வியும், வருத்தமும் லட்சக்கணக்கான வன்னியர் மக்கள் மனதில் ஆறாத வடுவாக இருப்பதை உங்களால் மறுக்க முடியுமா?

நீட் தேர்விற்கு தமிழ்நாட்டிற்கு விலக்கு வேண்டுமென ஒரே குரலில் எல்லோரும் கேட்டோம். நீங்களும் கேட்டீர்கள். உங்கள் கட்சியினர் இருந்த மேடையிலேயே நீட் விலக்கு கிடையாது என்று சொன்ன பாஜகவுடன் தொடர்ந்து மூன்று தேர்தல்களாக கூட்டணி வைத்த உங்களை தமிழ்நாட்டு மக்கள் எப்படி ஏற்பார்கள்? ஒன்றிய பாஜக அரசால் நியமிக்கப்பட்ட ஆளுநர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்நாடு அரசை செயல்படவிடாமல் தொந்தரவு செய்த போதெல்லாம், ஆளுநருக்கு எதிராக வலிமையான கருத்தை தெரிவிக்காமல், பாம்பும் சாகக் கூடாது தடியும் உடையக் கூடாது என்று நீங்கள் எடுத்த இரட்டை நிலைப்பாட்டை மக்கள் மறந்திருப்பார்களா?

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளராக 10 ஆண்டுகளாக இருந்து ஊடகங்களில் பேசி வருகிறேன். தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் ஊடகத்தின் வரியலாக என்னை பார்த்ததாக என்னிடமே கூறி வருகிறார்கள். இவ்வளவுக்கும் உரியவரான என்னை யாரோ ஒருவர், எந்த ஊர் என்று தெரியவில்லை என்று அன்புமணி ஆகிய நீங்கள் பொதுக்கூட்டத்தில் பேசிகிறீர்கள் என்றால் ஒரு கட்சியை வழிநடத்தும் தலைமைப் பண்பை தாங்கள் பெறவில்லை என்பதைத் தான் காட்டுகிறது” எனவும் தன்னுடைய அறிக்கையில் எம்பி சுதா காட்டத்துடன் பேசியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
Ilayaraja Biopic
mp sudha anbumani
Jayalalithaa and pm modi
nzvsban
vidaamuyarchi ott release date
kaliyammal tvk