LIVE : 1,000 முதல்வர் மருந்தகங்கள் திறப்பு முதல்… ரேகா குப்தா தலைமையிலான டெல்லி சட்டப்பேரவை வரை.!

இன்றயை அரசியல் செய்திகள் முதல் சினிமா செய்திகள் வரை முக்கியமான நிகழ்வுகள் கீழே விவரமாக நேரலையாக கொடுக்கப்பட்டு வருகிறது.

tamil live news

சென்னை : தமிழகம் முழுவதும் 1,000 இடங்களில் ‘முதல்வர் மருந்தகங்களை’ முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார். இந்த மருந்தகங்களில் மிகவும் குறைந்த விலையில் ஜெனரிக் உள்ளிட்ட மருந்து, மாத்திரைகள் விற்பனை செய்யப்படவுள்ளன. முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்பட்டாலும் அதிமுக ஆட்சியில் திறக்கப்பட்ட அம்மா மருந்தகங்கள் மூடப்படாது என்று அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

டெல்லியில் ரேகா குப்தா தலைமையிலான பாஜக அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், புதிய எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்புடன் இன்று கூடுகிறது டெல்லி சட்டப்பேரவை. நாளை துணைநிலை ஆளுநர் சக்சேனா உரையாற்ற உள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று பிப்ரவரி (24), 25 மற்றும் 27 ஆகிய தேதிகளில் டெல்லி சட்டப்பேரவை கூடுகிறது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜக அரசின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இது என்பது குறிப்பிடத்தக்கது.

1 of 1
மணிகண்டன்

காளியம்மாள் விலகல் :

  • நாம் தமிழர் கட்சியில் இருந்து அக்கட்சி மகளிர் அமைப்பு ஒருங்கிணைப்பாளராக இருந்த காளியம்மாள் விலகியுள்ளார்.
  • மணிகண்டன்

    சிவராத்திரி விழாவுக்கு தடையில்லை : 

  • கோவை ஈஷா யோகா மையத்தில் நடைபெற உள்ள சிவராத்திரி விழாவுக்கு தடை விதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
  • கெளதம்

    சாம்பியன்ஸ் டிராபியின் 6வது போட்டி

  • சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நியூசிலாந்து, வங்கதேசம் அணிகள் மோதுகிறது. பாகிஸ்தானின் ராவல்பிண்டி மைதானத்தில் பிற்பகல் 2.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது.
  • கெளதம்

    மருந்தகங்கள் திறப்பு

  • தமிழ்நாட்டில் 1000 இடங்களில் முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து காணொளி வாயிலாக திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
  • மணிகண்டன்

    செங்கோட்டையன் ஆப்சென்ட் : 

  • சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் இபிஎஸ் தலைமையில் நடைபெறும் ஜெயலலிதா பிறந்தநாள் விழாவில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை.  
  • மணிகண்டன்

    இபிஎஸ் மரியாதை : 

  • ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக அலுவலகத்தில் உள்ள அவரது சிலைக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 
  • மணிகண்டன்

    ரஜினிகாந்த் மரியாதை :

  • மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்திற்கு நேரில் சென்ற நடிகர் ரஜினிகாந்த், ஜெயலலிதா புகைப்படத்திற்கு மரியாதை செலுத்தினார்.
  • மணிகண்டன்

    சுரங்க விபத்து :

  • தெலுங்கானாவின் நாகர்கர்னூல் மாவட்டத்தில் சுரங்கப்பாதை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் 2 பொறியாளர்கள் உட்பட 8 தொழிலாளர்கள் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்க மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
  • மணிகண்டன்

    ரயில் எஞ்சின் தடம் புரண்டது :

  • திருவாரூரில் இருந்து காரைக்கால் நோக்கிச் சென்ற சரக்கு ரயிலின் எஞ்சின் தடம் புரண்டு தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கி ஜல்லிக் கற்கள் இடையே சிறிது தூரம் ஓடி நின்றது.
  • மணிகண்டன்

    விபத்து :

  • பாண்டிச்சேரியிலிருந்து விஜயவாடா சென்ற தனியார் சொகுசு பேருந்து, சூலூர்பேட்டை அருகே சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 17 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
  • மணிகண்டன்

    மீனவர்கள் வேலை நிறுத்தம்

  • இலங்கை கடற்படையின் கைது நடவடிக்கையைக் கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்துள்ளனர்.
  • 1 of 1

    Follow us

    Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    லேட்டஸ்ட் செய்திகள்