ஸ்பெயின் கார் ரேசில் மீண்டும் விபத்து… அஜித்-ன் கார் விபத்து எப்படி நடந்தது?

அஜித் குமாரின் அடுத்த கார் பந்தய நிகழ்வு மார்ச் 1 ஆம் தேதி ஸ்பெயினின் பார்சிலோனாவில் நடைபெறுகிறது என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ajith car accident spain

ஐரோப்பா : ஸ்பெயின் நாட்டில் நடந்த கார் ரேஸில் நடிகர் அஜித் கலந்துகொண்டார். கடந்த மாதம் துபாயில் நடந்த கார் பந்தயத்தில் அஜித் மூன்றாவது இடம் பிடித்து அசத்தினார். அதனைத்தொடர்ந்து தற்போது ஐரோப்பாவில் நடைபெற்று வரும் கார் பந்தயத்தில் பரபரப்பாக கலந்துகொண்ட அஜித், 2 முறை விபத்தில் சிக்கியுள்ளார்.

முதல் முறை நடந்த விபத்தில் இருந்து மீண்டு வந்தாலும், இரண்டாவது முறை மீண்டும் விபத்து ஏற்பட்டு இரண்டு முறை கார் கவிழ்ந்துள்ளது. இதில், கார் தலைகீழாக உருண்டு புரண்டது. முன்னே சென்று கொண்டிருந்த கார் திடீரென நிற்க, அதன்மீது அஜித்தின் கார் மோதியதால், விபத்து ஏற்பட்டுள்ளது.

அவர் மீண்டும் விபத்தில் சிக்கியதால் அவரது ரசிகர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர். ஆனால், விபத்து வீடியோவை வெளியிட்ட அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா, அஜித் தற்போது நன்றாக இருக்கிறார் என தெரிவித்துள்ளார்.

நடந்தது என்ன?

நடிகர் அஜித் ஓட்டிச் சென்ற ரேஸ் கார் விபத்தில் சிக்கிய புதிய வீடியோ வெளியாவை வைத்து பார்க்கையில், ஓடுபாதையில் மெல்ல வேகமெடுக்கும் அஜித்தின் கார், முன்னே சென்ற காரை சேஸ் செய்ய முயல்கிறது. இரு வளைவுகள் வரை சேஸிங் தொடர, வழி விடாமல் அந்த கார் குறுக்கே பாய்கிறது. இதில், அஜித்தின் கார் அதன் மீது மோதி கவிழ்ந்தது.

நலமுடன் இருக்கிறார் அஜித்

விபத்தை தொடர்ந்து அனைவரும் பதறிய நிலையில், நல்வாய்ப்பாக அஜித்துக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை எனத் தெரிகிறது. விபத்து தொடர்பான வீடியோவில், காருக்குள் இருந்து அஜித் பத்திரமாக வெளியேறுகிறார். இது குறித்து அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா, “ஸ்பெயின் நாட்டில் வேலன்சியாவில் நடந்து கொண்டிருந்த ரேஸின் 5வது சுற்று அஜித் குமாருக்கு நன்றாக இருந்தது. அனைவரிடமிருந்தும் பாராட்டுகளைப் பெற்று 14வது இடத்தைப் பிடித்தார். 6வது சுற்று துரதிர்ஷ்டவசமானது. மற்ற கார்கள் மோதியதால் 2 முறை விபத்துக்குள்ளானது.

வீடியோவில் அவர் தவறு செய்யவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. முதல் முறையாக விபத்து ஏற்பட்ட போதிலும், அவர் மீண்டும் நன்றாகச் செயல்பட்டார். இரண்டாவது முறை மீண்டும் விபத்து ஏற்பட்டபோது, ​​அவர் இரண்டு முறை கீழே விழுந்தார். அவரது விடாமுயற்சி வலிமையானது, மேலும் அவர் பந்தயத்தைத் தொடர மீண்டும் காயமின்றி வெளியே வருகிறார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த ரேஸ் எப்போது?

ஒரு பக்கம் விபத்தில் சிக்கிய அஜித்துக்கும் காயமின்றி தப்பிய நிலையில், மறுபக்கம் விபத்தில் சிக்கிய அவரது கார் பழுதுபார்க்கப்பட்டு வருகிறது. அஜித் குமாரின் அடுத்த கார் பந்தய நிகழ்வு மார்ச் 1 ஆம் தேதி ஸ்பெயினின் பார்சிலோனாவில் நடைபெறுகிறது என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்