லவ் டுடே வசூலை தூக்கி சாப்பிட்ட டிராகன்! முதல் நாள் வசூல் எம்புட்டு தெரியுமா?

லவ் டுடே திரைப்படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ.3.5 கோடி வசூல் செய்திருந்த நிலையில், டிராகன் திரைப்படம் அந்த வசூலை மிஞ்சியுள்ளது.

dragon box office love today

சென்னை : இன்றயை கால இளைஞர்கள் மத்தியில் எந்த மாதிரி படத்தினை இயக்கி நடித்தால் க்ளிக் ஆகும் என பிரதீப் ரங்கநாதன் சரியாக தேர்வு செய்து படங்களில் நடித்து வருகிறார். குறிப்பாக அவர் கடைசியாக லவ் டுடே என்கிற படத்தினை இயக்கி அதில் நடித்திருந்தார். அந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

படம் எடுக்கப்பட்டது ரூ.5 கோடி பட்ஜெட்டில் தான். ஆனால், படம் வசூல் செய்தது எவ்வளவு கோடி என்றால் உலகம் முழுவதும் 100 கோடிகளுக்கு மேல். இந்த படம் ஹிட் ஆன காரணத்தால் பிரதீப்  ரங்கநாதனுக்கு ரசிகர்கள் கூட்டமும் உருவானது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக பிரதீப் ரங்கநாதன் இயக்குநர் அஸ்வந்த் மாரிமுத்து இயக்கத்தில் உருவாகியுள்ள டிராகன் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இந்த திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த பிப்ரவரி 21-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படமும் ரசிகர்கள் எதிர்பார்த்ததை போலவே இருந்த காரணத்தால் தற்போது விமர்சன ரீதியாகவும் படம் பலத்த விமர்சனங்களை பெற்று கொண்டு வருகிறது. விமர்சனம் சிறப்பாக கிடைத்து வருவதால் வசூல் ரீதியாகவும் படத்திற்கு அருமையான வரவேற்பு கிடைத்து வருகிறது.

இந்த சூழலில், படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும் முதல் நாளில் எவ்வளவு கோடி வசூல் செய்துள்ளது என்கிற தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, படம் முதல் நாளில் ரூ. 5.6 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கு முன்னதாக அவருடைய நடிப்பில் வெளியாகி இருந்த லவ் டுடே திரைப்படம் வெளியான முதல் நாளில் ரூ.3.5 கோடி தான் வசூல் செய்திருந்தது.

அதை விட இப்போது டிராகன் திரைப்படம் அதிக வசூல் செய்திருக்கிறது. ஆனால், லவ் டுடே திரைப்படம் முதல் நாளுக்கு பிறகு அடுத்த நாட்களில் வசூல் வேகமாக மின்னல் வேகத்தில் அதிகரித்தது. அதைப்போல டிராகன் படமும் வசூலில் அதிகமாகுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்…

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்